Posts

Showing posts from 2020

Dr.John Scudder (Part II) (Tamil & English)

Image
1836 ம் ஆண்டு சென்னை பட்டணத்தில் தன் குடும்பத்தோடு ஜான் ஸ்கடர் கால் பதித்தார் அச்சுக்கூடத்தை சென்னையில் நிறுவி அதன் மூலம் சுவிசேஷ கைப்பிரதிகள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட வேண்டும் என்று ஆவல் கொண்டார். சென்னை கிறிஸ்தவ கல்லூரியை நிறுவிய டாக்டர் ஆண்டர்சன் அவரோடு ஜான் ஸ்கடருக்கு நெருங்கிய தொடர்பு கிடைத்தது. அவருடைய ஊழியம் ஜானை அதிகம் கவர்ந்தது. குறிப்பாக, கைப்பிரதி ஊழியத்தை அர்ப்பணத்தோடு செய்து வந்தார். காலரா மற்றும் மஞ்சள் காமாலையால் வேலூர் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்ட போது டாக்டர் ஜான் ஸ்கடர் தன்னால் இயன்றவரை அவர்களுக்கு மருத்துவ உதவி செய்து பலரது உயிர்களை காப்பாற்றினார். அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வந்த முதல் மருத்துவ மிஷினெரி என்ற பெருமை டாக்டர் ஜான் ஸ்கடரையே சாரும். ஆசியா கண்டத்திலேயே முதல்  Western Medical Missionயை இலங்கையில் ஸ்தாபித்த வரும் இவரே. சுமார்36 வருடங்கள் இந்தியாவிலே தன் பணிகளைச் செய்தார். குறிப்பாக சென்னை, வேலார், உதகை, ஆர்காட் போன்ற பகுதிகளில் தன்னுடைய மருத்துவ பணியுடன், சுவிசேஷ பணியையும் செய்து வந்தார். தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு ஆகிய மொழிகளில் மருத்துவம் ...

John Scudder (Part I) first American Medical Missionary in India (Tamil & English)

Image
இன்று இந்தியாவில், குறிப்பாக வேலூரில் புகழ் பெற்று விளங்கும் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரியைப் பற்றி அறியாதவர் எவரும் இருக்க முடியாது. அக்கல்லூரியை தோற்றுவித்த டாக்டர் ஐடா ஸ்கடரின் வாழ்வு நம் அனைவரையும் கவர்ந்தது என்றே சொல்லலாம். மருத்துவ வசதி கிடைக்காத ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றியும், அநேக மருத்துவர்களை உருவாக்கியும் வாழ்ந்து மறைந்தவர். கிராமப் புற சுகாதார மையங்களை ஏற்படுத்தி, மக்களின் வாழ்வை தூய்மையாக்கிய தோடு, கிறிஸ்துவின் அன்பையும் அவர்களுக்கு கொடுத்தவர். இவரால் தாதியர் பயிற்சி பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டு, அநேக பெண்களுக்கு பயிற்சி அளித்ததால், அநேக பெண் மருத்துவர்கள் உருவாக்கப்பட்டனர். உலகமே இவரை போற்றுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், இவருடைய பெற்றோர், பெற்றோரின் பெற்றோர் என அவருடைய குடும்பம் அதி முக்கிய காரணம் என்றால் மிகையாகாது. அவர்களின் முறையான பிள்ளை வளர்ப்பு, இந்த உலகமே திரும்பி பார்க்கும் உயர்ந்த பெண் மணியாக டாக்டர் ஐடா ஸ்கடரை மாற்றியது. தேவனுக்கு பணி செய்வதையே அவர்கள் தங்களுடைய வாழ்வின் முக்கிய குறிக் கோளாக கொண்டு இருந்தார்கள். எக்காரணம் கொண்டும், கிறிஸ்துவின் மேலுள்ள தங்கள் அன்ப...

Bartholomaus Ziegenbalg சீகன்பால்கு ஐயர் (Tamil & English)

Image
 சீகன்பால்கு ஐயர் ஜெர்மனி தேசத்திலிருந்து தன்னுடைய 23ஆம் வயதில் தமிழ்நாட்டில் தரங்கம்பாடிக்கு வந்தார். 13 ஆண்டுகள் மாத்திரமே ஊழியம் செய்த அவர் தன்னுடைய 36வது வயதில் மரித்துப் போனார். வாலிப வயதில், வாழ வேண்டிய வயதில், திருமணமான மூன்று ஆண்டுகளில் தேவனுடைய ராஜ்யத்தில் சேர்ந்தார். ஆனால் அவர் வாழ்ந்த நாட்களில் தனக்கென வாழாமல் தேவனுக்கென வாழ்ந்த உத்தம ஊழியராக வாழ்ந்தார். கிறிஸ்துவின் நிமித்தம் பாடுகளை சந்தித்து சிறையில் அடைக்கப்பட்ட போதிலும், அவருக்காக முன்வைத்த கால்கள் ஒருபோதும் பின்னிட்டுப் பார்க்கவில்லை. தேவன் தன்னை கொண்டு நிறைவேற்ற உள்ள திட்டத்தை செயல்படுத்த சீகன்பால்க் தன் தரிசன பார்வையை கூர்மையாக்கினார். தன் எண்ணங்களை கிறிஸ்துவின் ஆளுகைக்குள் ஒப்புக்கொடுத்து பரந்த தரிசனத்தை பெற்றுக்கொண்டார். அவர் மரித்த போது அவருடைய சரீரம் தரங்கம்பாடியில் அவர் கட்டிய எருசலேம் ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவர் நினைவாக எழுப்பப்பட்டுள்ள தூணில் கீழ் கண்ட வாசகம் எழுதப்பட்டுள்ளது. பர்தலோமேயு சீகன்பால்க் • முதன்முதல் இந்தியா வந்த புராட்டஸ்டண்ட் அருள் தொண்டர் • முதன்முதல் அரசின்...

Joshua Marshman ஜாஷ்வா மார்ஷ்மேன் (Tamil & English)

Image
1768 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் வெஸ்ட்பெரி மாகாணத்தில் ஜாஷ்வா மார்ஷ்மேன் பிறந்தார்.  தன் தந்தை செய்து வந்த நெசவுத் தொழிலையே மார்ஷ்மேன் செய்து வந்ததால் சமுதாயத்தில் சொல்லிக் கொள்ளும்படியான எந்த அடையாளமும் இன்றி ஏழ்மையான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். நாட்கள் செல்ல செல்ல மார்ஷ்மேனின்  உள்ளம் இயேசுவுக்காக எதையாவது செய்ய உந்தித் தள்ளியது. கிறிஸ்துவின் அன்பிற்கு அடிபணிந்த அவர் பிரிஸ்டல் அகடமியில் கஷ்டப்பட்டு சேர்ந்து லத்தீன்,  கிரேக்கம், எபிரேயம், சீரியா ஆகிய மொழிகளில் புலமை பெற்றார்.  அங்கு கல்வி பயின்று வந்த நாட்களில்,  பாப்திஸ்து மிஷனெரி சொசைட்டி மூலம் வெளியிடப்பட்ட மாத இதழை படிக்க ஆரம்பித்தார் . அதன் மூலம் இந்தியாவில் பணியாற்றி வந்த வில்லியம் கேரியின் ஊழியங்களை பற்றி  தெரிந்துகொண்டார்.  தேவையுள்ள இந்திய தேசத்தை பற்றிய பாரம் அவரை அழுத்த,  இந்தியாவில் பணி செய்ய தன்னை ஆண்டவரிடம்  முழுமையாக அர்ப்பணித்தார். 1799ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13ம் நாள் தன் மனைவி ஹன்னா உடன் இந்தியா வந்தார். கப்பலிலிருந்து செராம்பூர் இறங்கிய உடன்  கரையில் ந...

Rev. Thomas Gajetan Ragland இராக்லாந்து (Tamil & English)

Image
அக்டோபர் 22 ஆம் தேதி காலையில் விடியும் வேளை வந்து விட்டது என்று எண்ணி மூன்று மணிக்கே மிஷனெரி இராக்லாந்து படுக்கையை விட்டு எழுந்து விட்டார். நிலா வெளிச்சத்தை கிழக்கு வெறுப்பு என்று நினைத்தார். முந்தின  இரவே  பாளையங்கோட்டைக்கு அனுப்பவேண்டிய கடிதங்களை எழுதி முடித்திருந்ததால் கடிதங்களை பாளையங்கோட்டைக்கு கொண்டு போகும்  நபரை எழுப்பி அக்கடிதங்களையும்,  சென்னைக்கு தபாலில் சேர்க்க வேண்டிய கடிதங்களையும் கொடுத்து அம்மனிதனை அனுப்பிவிட்டார். அதன்  பின்னரே நேரத்திற்கு முன் தான் விழித்துக்கொண்டதை உணர்ந்தார். உடன் ஊழியர்  ப்வெனும் விழித்துக்கொண்டார்.  அவர் இராக்லாந்திடம் "நேரம் இருக்கிறது,  சற்று படுத்து உறங்குங்கள்" என்று கூற,  "இல்லை,  தூக்கம் போய்விட்டது" என்று கூறி தனது வேதாகமத்தை எடுத்து வாசித்து,  தியானித்து,  ஜெபிக்க உட்கார்ந்தார்.  ஒரு மணி நேரம் அதில்  செலவிட்ட பின்  அதிகாலை நேரம் ஆகிவிட்டதை அறிந்து வெளியே சென்று உலாவப் புறப் பட்டார். காலை ஆகாரம்  அருந்திய பின் அவரும் ப்வெனும் அந்த வார வரவு செலவு கணக்குக...

FRANCIS ASBURY ஆஸ்பரி (Tamil & english)

Image
  ஆஸ்பரி 1770 களில் வாழ்ந்த ஒரு மெத்தடிஸ்ட் சபை பிரசங்கியார். சுற்று சவாரி பிரசங்கி ( Itinerant Preacher) என்னும் முறையை ஆத்துமாக்களை கிறிஸ்துவுக்குள்ளாக ஆதாயப்படுத்த பயன்படுத்தியவர் இவர். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10000 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்தார். இவ்வாறு 50 ஆண்டுகள் குதிரையில் சுவிசேஷ பணியை செய்து வந்தார். சரீரத்தில் சுகவீனம் இருந்தாலும் அதை ஒரு பொருட்டாக எண்ணாமல் நீண்டகாலம் கெட்டுப்போகாத ஒரு உணவினால் தன்னை பலப்படுத்திக் கொண்டு ஆத்தும ஆதாய பணியை செய்து வந்தார். அமெரிக்காவில் குடியேறிய ஆங்கிலேய குடியிருப்புகளில் இருந்தவர்களை ஆண்டவருக்குள் வழிநடத்த இந்த குதிரை சவாரி முறையை பயன்படுத்தினார். ஆங்காங்கே ஆலயங்களையும் கட்டி எழுப்பினார். 1771ம் ஆண்டு ஆஸ்பரி இந்த குடியிருப்பு பகுதிக்கு வந்த பொழுது முழு அமெரிக்காவிலும் 600 மெத்தடிஸ்ட் கிறிஸ்தவர்களே இருந்தனர். ஆனால் இவர் ஊழியம் செய்த 45 வருடங்களுக்குப் பின்னர், அந்த தொகை இரண்டு இலட்சமாக பெருகியது. அவரைப் போல 700 சுற்று சவாரி பிரசங்கிமார்களை எழுப்பினார்.   அவருடைய சுவிசேஷப் பணி கிட்டத்தட்ட பவுல் அப்போஸ்தலனி...

லோத் கேரி (1780-1828) Lot Carey ( Tamil & English)

Image
 லோத் கேரி ஒரு பாப்திஸ்து சபை போதகர்.  1820ல் லைபீரிய காலனி உருவாக ஒரு காரணமாக செயல்பட்டார். 1780 இல் வெர்ஜீனியாவில் உள்ள சார்லஸ் சிட்டி என்ற நகரில் அடிமையாக பிறந்ததால் ஜான் பௌரி  என்பவரிடம் அடிமையாக வாழ்ந்து வந்தார். இவரது எஜமான் ஒரு மெத்தடிஸ்ட் போதகர் என்பதால் கேரிக்கு கொஞ்சம் சுதந்திரம் கிடைத்தது. 1807 ஆம் ஆண்டு ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை ஆராதனையில் கொடுக்கப்பட்ட செய்தி இவருக்குள்  மிகுந்த தாக்கத்தை உண்டாக்கியது. “நீ மறுபடியும் பிறக்க வேண்டும்“ என்ற வாக்கியம் மீண்டும் மீண்டும் அவள் செவிகளில் ஒலித்து,  இருதயத்தில் கிரியை செய்ய ஆரம்பித்தது. இதன் விளைவாக அவர் ஒரு புது மனிதனாக மாற்றம் பெற்று, மாபெரும் மகிழ்ச்சியையும்,  ஈடு இணையில்லா சந்தோஷத்தையும் தரும் இரட்சிப்பின் அனுபவத்தையும் பெற்று கொண்டார்.   கேரி ரிஷ்மனன் என்னும் பகுதியில்  அமைந்த முதல் பாப்திஸ்து சபையில் இணைந்தார்.  அது வெள்ளை மற்றும் கருப்பு இன அடிமைகள் மற்றும் சுயாதீன ரின் சபையாக இருந்தது. அக்காலத்தில் நடந்த சமூக மற்றும் சமய சீர்திருத்தங்களின் காரணமாக அநேக மெத்தடிஸ்ட் ...

மாம்பழச் சங்க விழா Mambala Changam (Tamil & English)

தென்னகத்தின் மீட்பிற்காக மேலை நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு மிஷனரிகளாக வந்த பல போதகர்கள்,  அறிஞர்கள் மற்றும் மருத்துவர்கள் அரும் பெரும் தொண்டாற்றினார்கள்.  அவர்களின் முயற்சிகளுக்கு பலனாகவே இன்று தென் தமிழகத்தில் பல நூறு பள்ளிக்கூடங்கள்,  ஆலயங்கள்,  சமுதாய மேம்பாட்டுப் பணிகள் போன்றவை என்றும் அழியாது உயர்ந்து நிற்கிறது. “திருநெல்வேலியின் அப்போஸ்தலன்” என்று அழைக்கப்பட்ட முன்னோடி ஊழியர் ரேனியஸ் ஐயர் அவர்கள் இத்தகைய சிறப்புமிக்க தொண்டாற்றியது மட்டுமல்லாது, மக்கள் மனதில் பதிந்திருந்த ஜாதிவெறி,  மூடநம்பிக்கைகள்,  ஏற்றத்தாழ்வுகள் போன்றவற்றிலிருந்து விடுதலை பெற அதிக முயற்சி எடுத்தார். அக்காலத்தில் புதிதாக இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட மக்களுக்கு பிற மதத்தினரால் கடும் உபத்திரவம் ஏற்பட்டது. எனவே அப்பகுதிகளில் மிஷன் சார்பில் நிலங்களை வாங்கி, அங்கு புதிய கிறிஸ்தவர்களை குடியேறும் படி செய்தார். இதனால் டோனாவூர் உட்பட சுமார் 25 கிறிஸ்தவ கிராமங்கள் ரேனியஸ் ஐயர் அவர்களால் உருவாக்கப்பட்டது. இக்கிராமங்களில் செயல்பட்டுவந்த சபைகளில் பல ஒழுங்குமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அனுதின...

Just PUSH

Image

ANNIE ARMSTRONG ஆனி ஆர்ம்ஸ்ட்ராங் (Tamil & English)

Image
 ஆனி ஆர்ம்ஸ்ட்ராங்            மிஷனரிப் பணி என்றவுடன் நம் நினைவிற்கு வருவது எல்லாம் காடு மலைகளில் ஊழியம் செய்வது மட்டுமே. இன்னும் சிலருக்கு காட்டுமிராண்டிகள் மத்தியில் ஊழியம் செய்வது என்பது நினைவிற்கு வரும். இது ஒருவகையில் உண்மைதான் என்றாலும் இருந்த இடத்திலிருந்தே மிஷனெரி பணியை நம்மால் செய்ய முடியுமா?  முடியும் என்று  ஆனி ஆர்ம்ஸ்ட்ராங் வாழ்ந்து காட்டியுள்ளார்.            இவர் அன்னை தெரசாவை போல ஏழை மக்களை அரவணைத்து ஆதரித்தவர் இல்லை; பிளாரன்ஸ் நைட்டிங்கேல் போன்று நோயுற்றவர்களை கவனிக்கும் தாதியும் அல்ல; ஆனால் ஆண்டவர் தனக்கு கொடுத்த எழுத்துத் திறமையை கொண்டு மிஷனெரி பணிகளை தாங்கினார். தேவன் தன்னை கொண்டு செய்யப் போகும் மாபெரும் திட்டத்தை மனதில் கொண்டு திறம்பட செயலாற்றினார்.              தன் முழு இருதயத்துடன் இயேசுவை நேசித்த இவர் மிஷனெரிகளுக்கு உதவிட வேண்டும் என்ற வார்த்தையினால் கடிதங்கள் எழுதுவதின் மூலம் தன் பணியை ஆரம்பித்தார். விரல்கள் அத்தனையும் மூலதனங்கள் ஆயின. அவைகளே...

Theodore Howard Somervell (in English)

Image
Theodore Howard Somervell was an English surgeon. He was a man with great interest in painting. His paintings are still present at the Geological Society. Not only was he a great musician but also a song translator. He translated many Tibetan songs to English and captured the hearts of all by singing them. During the last days of his medical studies, the first world war broke out. With the injured and wounded victims of the First World War needing a doctor, he worked among them as a surgeon. Though he was a medical surgeon, mountain climbing was another of his main interest. He desired to climb Mount Everest and started his journey by trekking the 29,000 foot high mountain. Headed by Dr. George Mallory, they set out on this mission. Unfortunately, Dr. George Mallory died due to severe blizzard(snow storm). Thus, Somervell's attempt to climb the mountain was unsuccessful. However, Somervell climbed the mountain again. This time, he was accompanied by 15 Sherpas, people who live at t...

AMY CARMICHAEL ஏமி கார்மைக்கேல் (Tamil & English)

Image
ஏமியும் அவள் அம்மாவும் சிற்றுண்டி சாலையில் அமர்ந்து இருந்தார்கள். வெளியே மழையோடு குளிரும்  வாட்டி கொண்டிருந்தது. வித விதமான உணவுகள் கண்ணாடி பெட்டியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. ஏமியின்   விருப்பத்திற்கு ஏற்ப அவள் தாய் அவளுக்கு கேக்குகளை வாங்கி கொடுத்தார்.  வெளியே மழை கொட்டோ கொட்டு என கொட்டி கொண்டிருந்தது.  ஏமி அவள் வயதையொத்த ஒரு சிறுமி கடைக்கு வெளியே நின்று கொண்டிருப்பதை கண்ணாடி வழியாக கவனித்தாள். கிழிந்த ஆடையோடு காலில் செருப்பில்லாமல்,  தலையில் குளிருக்கு போடும் குல்லாவும் இல்லாமல் உடல் நடுங்கி நின்று கொண்டிருந்தாள்.  பசியின் கொடுமையினால்  ஜன்னல் வழியாக பலகாரங்களை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்த அச்சிறுமியின் காட்சி ஏமியின் சிறிய உள்ளத்தை அதிகம் பாதித்தது. வீட்டிற்கு வந்து குளிர்காயும் அடுப்பின் அருகில் தன் உடைகளையும் காலணிகளையும் சூடாக்கி கொண்டிருந்த ஏமி,  திடீரென்று எழுந்து ஒரு பென்சிலை எடுத்தாள்.    நான் வளரும்போது  என் கையில் பணம் வரும்போது உன்னை போன்ற ஏழை சிறுமிகளுக்கு அழகிய பெரிய இன்பமான வீடு ஒன்றை கட்டுவேன்   ...

John Wesley Quotes : Twelve powerful sayings... ஜான் வெஸ்லி நியமித்த 12 ஒழுங்குகள் (Tamil & English)

Image
  இங்கிலாந்தை அசைத்த தேவ மனிதர் ஜான் வெஸ்லி அவர்கள் கிறிஸ்தவர்களுக்கென்று நியமித்த 12 ஒழுங்குகள் 1. ஊக்கமும் சுறுசுறுப்பும் உள்ளவனாய் இரு. ஒருபோதும் சும்மா இராதே. உன் கரங்கள் எப்பொழுதும் ஏதாவது ஒரு பயனுள்ள வேலையில் ஈடுபட்டு இருக்கட்டும். காலத்தை வீணாக்காதே. தேவையான இடத்தில் அவசியமான அளவு நேரத்தை விட எவ்விதத்திலும் கூடுதலான நேரத்தை செலவிடாதே. 2. மிகவும் விழிப்புள்ளவனாயிரு. கர்த்தருக்குப் பரிசுத்தம் என்பதே உன் வாழ்வின் சட்டவாக்கியமாய்  இருக்கட்டும்.  எல்லா  வெதுவெதுப்பையும்,  கேலிப் பேச்சுக்களையும்,  முட்டாள்தனமான பேச்சையும் உன்னைவிட்டு அகற்று. 3. பெண்களுடன் உரையாடுகையில் உன் உரையாடல் மிகவும் சுருக்கமாகவும் குறுகிய நேரம் உடையதாகவும் இருக்கட்டும். முக்கியமாக இளம்பெண்களுடன் நீ சம்பாஷிக்கையில்  மிகவும் ஞானத்தோடு நடந்துகொள். 4. கிறிஸ்துவுக்குள் உன்னைவிட அனுபவமுள்ள சகோதரர்களிடம் ஆலோசனை கேட்காமல் உன் திருமண காரியத்தில் எந்த முடிவும் எடுத்து விடாதே. 5.உன் சொந்த கண்கள் காணாதிருக்க,  யாரைக் குறித்தும் பேசப்படும் தீமையானவற்றை ஒருபோதும் நம்பாதே. எல்லாவற்றையும்...

Dr.Howard Somervell தியோடர் ஹோவர்ட் சாமெர்வெல் (Tamil & English)

Image
தியோடர் ஹோவர்ட் சாமெர்வெல்,  இங்கிலாந்து தேசத்தில் ஒரு அறுவை சிகிச்சை நிபுணர். ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் உடையவர். இந்நாளில் அவர் வரைந்த ஓவியம் புவியல் சமூகக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவர் ஒரு சிறந்த இசைக் கலைஞரும் கூட. இவர் பல திபெத்திய பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து,  பாடி அனைவர் மனதிலும் இடம் பிடித்துள்ளார். அவருடைய மருத்துவப் படிப்பின் இறுதி நாட்களில் முதலாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கு காயப்பட்ட வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் தேவைப்பட்டதால் அங்கு சென்று அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றினார். அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தாலும் மலை ஏறுவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். 29000 அடி உயரத்தில் இருந்த எவரெஸ்ட் மலையை ஏறும் முயற்சியில் ஈடுபட்டார். டாக்டர் ஜார்ஜ் மல்லாரியின் தலைமையில் சென்ற போது ஏற்பட்ட கடுமையான பனிப் புயலின் காரணமாக ஜார்ஜ் மல்லாரி அப்பொழுதே மரணமடைந்தார். ஆகவே  ஹோவர்ட் சாமெர்வெலின் மலை ஏறும் முயற்சியும் தோல்வியடைந்தது. மறுபடியும் ஹிமாலய மலை அடிவாரத்தில் வாழ்ந்த ஷெர்பாக்கள் என்னும் வழிகாட்டினர்கள் சுமார் பதினை...

ROBERT CALDWELL - Idayangudi Missionary (Tamil & English)

Image
ROBERT CALDWELL கீழ் நெல்லை அப்போஸ்தலன் என்று அழைக்கப்பட்ட ராபர்ட் கால்டுவெல் 1814 ம் ஆண்டு மே மாதம் 7 ம் தேதி அயர்லாந்தில் பிறந்தார். தொடக்கத்தில் தானாகவே கல்வி பயின்ற இவர் தனது கல்லூரி படிப்பை கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பயின்றார். அங்கு அவருக்கு மொழியியல் ஆராய்ச்சியிலும் சமூகப்பணியிலும் அதிக ஆர்வம் ஏற்பட்டது. தனது இருபத்து நான்காம் வயதில் தேவனுடைய அழைப்பை ஏற்று லண்டன் மிஷனரி சொசைட்டி உதவியுடன் இந்தியாவிற்கு புறப்பட்டார். அவர் சிறந்த ஓவியர் .   தன் தாயிடம் விடை பெறும் போது , தாய் அவரை நெற்றியில் முத்தமிட்டு மகிழ்வுடன் உன்னை அனுப்புகிறேன். என் சிந்தையில் கூட முறுமுறுப்பில்லாமல் உன்னை கர்த்தருக்கு மனப்பூர்வமாக கொடுக்கிறேன் என்றார். கப்பலில் பயணித்த போது கடலில் ஏற்பட்ட சூரை காற்று காரணமாக எதிராக வந்த பிரெஞ்ச் கப்பலுடன் மோதி மூழ்கியதில் ஆறு பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். அதில் ராபர்ட் கால்டுவெல்லும் ஒருவர். தேவன் அவரை பற்றிய உயர்ந்த நோக்கம் தெளிவாக இதில் தெரிந்தது. சென்னையி ல் மூன்று ஆண்டுகளில் தமிழ் மொழியையும் வடமொழியையும் கற்று இரண்டு மொழிகளிலும் புலமை பெற்றார் . பி...