சீகன்பால்கு ஐயர் ஜெர்மனி தேசத்திலிருந்து தன்னுடைய 23ஆம் வயதில் தமிழ்நாட்டில் தரங்கம்பாடிக்கு வந்தார். 13 ஆண்டுகள் மாத்திரமே ஊழியம் செய்த அவர் தன்னுடைய 36வது வயதில் மரித்துப் போனார். வாலிப வயதில், வாழ வேண்டிய வயதில், திருமணமான மூன்று ஆண்டுகளில் தேவனுடைய ராஜ்யத்தில் சேர்ந்தார். ஆனால் அவர் வாழ்ந்த நாட்களில் தனக்கென வாழாமல் தேவனுக்கென வாழ்ந்த உத்தம ஊழியராக வாழ்ந்தார். கிறிஸ்துவின் நிமித்தம் பாடுகளை சந்தித்து சிறையில் அடைக்கப்பட்ட போதிலும், அவருக்காக முன்வைத்த கால்கள் ஒருபோதும் பின்னிட்டுப் பார்க்கவில்லை. தேவன் தன்னை கொண்டு நிறைவேற்ற உள்ள திட்டத்தை செயல்படுத்த சீகன்பால்க் தன் தரிசன பார்வையை கூர்மையாக்கினார். தன் எண்ணங்களை கிறிஸ்துவின் ஆளுகைக்குள் ஒப்புக்கொடுத்து பரந்த தரிசனத்தை பெற்றுக்கொண்டார். அவர் மரித்த போது அவருடைய சரீரம் தரங்கம்பாடியில் அவர் கட்டிய எருசலேம் ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவர் நினைவாக எழுப்பப்பட்டுள்ள தூணில் கீழ் கண்ட வாசகம் எழுதப்பட்டுள்ளது.
பர்தலோமேயு சீகன்பால்க்
• முதன்முதல் இந்தியா வந்த புராட்டஸ்டண்ட் அருள் தொண்டர்
• முதன்முதல் அரசின் உரிமை பெற்ற அருள் தொண்டர்
• முதன் முதலில் இந்தியாவில் பிராட்டஸ்டண்ட் பக்தியை பரப்பினவர்
• முதன் முதல் இந்தியாவில் அச்சகத்தை ஆரம்பித்தவர்
• முதன்முதல் இந்தியாவில் காகித ஆலையை ஆரம்பித்தவர்
• முதன்முதல் புதிய ஏற்பாட்டை தமிழில் மொழிபெயர்த்தவர்
• முதன்முதல் புதிய ஏற்பாட்டை தமிழில் அச்சிட்டவர்
• முதன்முதல் தமிழில் நாள்காட்டியை அச்சிட்டு வெளியிட்டவர்
• முதன்முதல் ஜெர்மன் ஞான பாடல்களை தமிழில் அச்சிட்டவர்
• முதன்முதல் தமிழ் நூல்களை ஜெர்மன் மொழியில் வெளியிட்டவர்
• முதன் முதல் தமிழ் உரைநடையை அறிமுகப்படுத்தியவர்
• முதன் முதல் பெண்கள் பள்ளியை ஆரம்பித்தவர்
• முதன்முதல் ஏழைப் பிள்ளைகளுக்கு காப்பகத்தை துவக்கியவர்
• முதன்முதல் பெண்களுக்குத் தையற் கூடம் ஆரம்பித்தவர்
• முதன் முதல் இலவச மதிய உணவு வழங்குவதை துவக்கியவர்
• முதன்முதல் பள்ளி பிள்ளைகளுக்கு பாடநூலை அச்சிட்டவர்
• முதல் முதல் தமிழ் பிராட்டஸ்டண்ட் ஆலயத்தை கட்டியவர்
• முதன் முதல் தமிழ் மொழியில் அருளுரை ஆற்றினவர்
• முதன்முதல் இறையியல் கல்லூரியை உருவாக்கியவர்
• முதன்முதல் பல்சுவை உரையாடலை துவக்கியவர்
• முதன்முதல் பல்சுவை மொழியில் அகராதியை உருவாக்கினார்
• முதல் தென்னிந்திய கடவுள்களின் வரலாற்றை எழுதியவர்
• முதன் முதல் அருள் தொண்டில் பன்னாட்டு உறவை உருவாக்கியவர்
• முதன்முதல் ஜெர்மனியில் தமிழை கற்றுக் கொடுக்க பரிந்துரைத்தவர்
வெளிநாட்டிலிருந்து வந்த மிஷனரிக்கு நம் தேசத்தின் மீது, குறிப்பாக தமிழ்நாட்டின் மீது இவ்வளவு அன்பு இருக்கும் என்றால் நமக்கு எப்படி இருக்க வேண்டும்? அன்று கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்கள் தேவை உள்ளவர்களிடம் சென்று, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தினார்கள். இன்றைய கிறிஸ்தவர்களாகிய நம்முடைய அணுகுமுறை எப்படிப்பட்டதாய் உள்ளது? ஒரு நாள் வாழ்ந்தாலும் அவற்றை அர்த்தமுள்ளதாக வாழ்வோம். “எல்லா சபைகளை குறித்தும் உண்டாயிருக்கிற கவலை என்னை நாள்தோறும் நெருக்குகிறது” (2 கொரிந்தியர் 11:28) என்று பவுல் கூறுகிறது போல, நம்மையும் நெருங்குகிறதா? சிந்தித்துப் பார்ப்போம்.
Ziegenbalg Iyer
came to Tharangambadi, Tamil Nadu, at the age of 23 from Germany. After serving
for only 13 years, he died at the age of 36. Entered the kingdom of God at the
age of youth, at the age of living, and at three years of marriage. But in the
days he lived, he lived as a perfect servant who lived for God and not for
himself. Despite suffering and being imprisoned for Christ's sake, the feet set
forth for him never looked back. Ziegenbalg sharpened his vision to carry out
God's plan for him. He surrendered his thoughts to the Lordship of Christ and
gained a wider vision. When he died, his body was buried in the Jerusalem
temple he had built in Tharangambadi. The pillar erected in his memory bears
the following text:
Bartholomew
Ziegenbaulg
Arul Dondar was
the first Protestant to come to India.
• Arul Dondar is
the first government entitled
• He was the
first to spread Protestant piety in India.
He started the
first printing press in India.
He started the
first paper mill in India.
• He was the
first to translate the New Testament into Tamil.
• He printed the
first New Testament in Tamil.
• He was the
first to print and publish a calendar in Tamil.
• He was the
first to print German hymns in Tamil.
• The first
published Tamil books in German
• He introduced
the first Tamil prose
• He started the
first girls' school.
• He started the
first orphanage for poor children.
• He started the
first tailor shop for women.
• Initiator of
the first free midday meal
• He printed
textbooks for primary school children.
• Built the
first Tamil Protestant temple
• He was the
first to recite the Arulurai in Tamil.
• Founder of the
first theological college
• Initiator of
first language conversation
• Created the
first dictionary in Balsavai.
• Wrote the
first history of South Indian gods
• First and
foremost, Arul Dontil created international relationships.
• It was first
suggested to teach Tamil in Germany.
If a foreign
missionary has so much love for our country, especially Tamil Nadu, how should
we feel? Those who accepted Christ that day went to the needy and uplifted
their livelihoods. What is our attitude as Christians today? Even if we only
live one day, let's live it meaningfully. As Paul says, "Anxiety about all
the churches troubles me daily" (2 Corinthians 11:28), does it bring us
closer? Let's think about it.
Comments
Post a Comment