Clarinda -Clorinda (Tamil & English)
குளோரிந்தாள் அம்மையாரின் பழைய பெயர் லட்சுமி என்னும் கோகிலா என்று கூறப்படுகிறது. 1746 - ஆம் ஆண்டு பிறந்த இவர் மராட்டிய பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். அவரது தந்தை , தஞ்சை மன்னரின் தலைமைப் புரோகிதர். ஒரு நாள் தஞ்சை அரண்மனைத் தோட்டத்தில் சிறுமியாக இருந்த கோகிலா மற்றப் பெண்களுடன் மலர்களைப் பறித்து விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு நச்சுப் பாம்பு கோகிலாவைக் கடித்தது. சிறுமியர் இது கண்டு கூக்குரலிட்டனர். அப்பொழுது காவலிலிருந்த ஆங்கிலப் போர் வீரன் லிற்றில்டன் என்பவர் ஓடி வந்து உடைவாளால் பாம்பு கடித்த இடத்தைக் கீறி, தன் வாயால் உறிஞ்சி விஷத்தை துப்பியவுடன் கோகிலா பிழைத்தாள். ஆண்டுகள் பல சென்றன. லிற்றில்டன் தலைமையில் ஒரு சிறிய படை சென்னையிலிருந்து தஞ்சைக்கு அனுப்பப்பட்டது. அவர்கள் வயல் நடுவிலே பாதையில் வந்து கொண்டிருந்தபோது ஆற்றின் ஓரம் மேடான இடத்தில் ஒரு கூட்டம் காணப்பட்டது. அங்கே ஒரு பிணம் , அடுக்கப்பட்டு விறகுக் கட்டைகளின் மேல் வைக்கப்பட்டிருந்தது. இறந்தவன் ஒரு பிராமணன். கோகிலாவின் கணவர். பிணத்தை அவள் சுற்றி வரும்படி கட்டாயப்படுத்த...