ANNIE ARMSTRONG ஆனி ஆர்ம்ஸ்ட்ராங் (Tamil & English)
ஆனி ஆர்ம்ஸ்ட்ராங் மிஷனரிப் பணி என்றவுடன் நம் நினைவிற்கு வருவது எல்லாம் காடு மலைகளில் ஊழியம் செய்வது மட்டுமே. இன்னும் சிலருக்கு காட்டுமிராண்டிகள் மத்தியில் ஊழியம் செய்வது என்பது நினைவிற்கு வரும். இது ஒருவகையில் உண்மைதான் என்றாலும் இருந்த இடத்திலிருந்தே மிஷனெரி பணியை நம்மால் செய்ய முடியுமா? முடியும் என்று ஆனி ஆர்ம்ஸ்ட்ராங் வாழ்ந்து காட்டியுள்ளார். இவர் அன்னை தெரசாவை போல ஏழை மக்களை அரவணைத்து ஆதரித்தவர் இல்லை; பிளாரன்ஸ் நைட்டிங்கேல் போன்று நோயுற்றவர்களை கவனிக்கும் தாதியும் அல்ல; ஆனால் ஆண்டவர் தனக்கு கொடுத்த எழுத்துத் திறமையை கொண்டு மிஷனெரி பணிகளை தாங்கினார். தேவன் தன்னை கொண்டு செய்யப் போகும் மாபெரும் திட்டத்தை மனதில் கொண்டு திறம்பட செயலாற்றினார். தன் முழு இருதயத்துடன் இயேசுவை நேசித்த இவர் மிஷனெரிகளுக்கு உதவிட வேண்டும் என்ற வார்த்தையினால் கடிதங்கள் எழுதுவதின் மூலம் தன் பணியை ஆரம்பித்தார். விரல்கள் அத்தனையும் மூலதனங்கள் ஆயின. அவைகளே தேவ ஊழியர்கள் மீது கொண்டுள்ள பாசத்தை வெளிப்படுத்தும் சிறந்த கருவிகள் ஆயின. தட்டச்சு மூலமாகவும் தன் கை படவும் ம