விசுவாசத்தில் வல்லவர்- ஜார்ஜ் முல்லர், George Muller (Tamil & English)
விசுவாசத்திற்குக் எடுத்துக் காட்டு ஜார்ஜ் முல்லர் ஆவார். வேதாகமத்தில் ஆபிரகாம் விசுவாசத்தின் தகப்பன் என்று எப்படி அழைக்கப்படுகிறாரோ, அதே போல நடைமுறை வாழ்விலே ஜார்ஜ் முல்லரை விசுவாசத்தில் வல்லவர் என்று கூறுகிறார்கள். அவரது வாழ்வில் எல்லா காரியங்களையும் விசுவாசத்தால் மட்டுமே சாதித்தார். ஜார்ஜ் முல்லர் இங்கிலாந்து தேசத்தில் அநேக அனாதை இல்லங்களை நடத்தி கொண்டு வந்தார். தாய், தந்தை இல்லாத சிறுவர், சிறுமிகள் சுமார் ஒன்றரைலட்சம் பேர் அங்கே இருந்து படித்தார்கள். அனாதைப் பிள்ளைகளுக்கென நடத்தப்பட்ட விடுதி என்பதால் அதன் மூலம் அவருக்கு எந்த மாத வருமானமும் இல்லை. அவர்களை பராமரிக்க எவ்வளவு செலவு ஆகும் என்பதை பற்றி சிறிதளவும் கூட அவர் கவலைப்படாமல், ஆண்டவரையே முழுமையாக நம்பி இருந்தார்.ஒரு நாள், அனாதை இல்லத்தில் குழந்தைகளுக்குக் காலை உணவு பரிமாறப்பட வேண்டும், ஆனால் இல்ல பணியாளர்கள் பிள்ளைகளுக்கு உணவளிக்க ஒன்றுமே இல்லை, என்ன செய்வது என்று ஜார்ஜ் முல்லரிடம் கேட்டனர். ஜார்ஜ் முல்லரோ பிள்ளைகளை சாப்பிட மேஜையில் அமர வைக்கக் கூறினார். பணியாளர்களுக்கு ஒன்ற...