கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் Graham Staines
1999 - ஆம் ஆண்டு ஜனவரி 22 - ஆம் நாள் நள்ளிரவில் ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியாவின் ஒரிசா மாநிலத்திற்கு சமூக சேவை செய்ய வந்த கிரஹாம் ஸ்டுவர்ட் ஸ்டெய்ன்ஸ் (57 வயது) அவரது மகன்கள் பிலிப்பு (10 வயது) தீமோத்தேயு (7 வயது) இம்மூவரும் இரக்கமின்றி தீ கொளுத்தப்பட்டார்கள். ஒரிசாவிலுள்ள கியோஞ்ஜகார் மாவட்டத்தைச் சேர்ந்த பாரிப்படாவில் வாழும் சராசரி மனிதர்களில் ஒருவர் சாந்தானுசத்பரி. எதிர்பாராதவிதமாக ஆஸ்திரேலியாவிலுள்ள கிரஹாம் ஸ்டுவர்ட் ஸ்டெய்ன்ஸ் அவரது பேனா நண்பரானார். இவர்கள் இருவரிடையேயும் கடிதத் தொடர்பின் மூலம் பெற்ற அன்பு மேலோங்கியது. சத்பதி தன் கடிதத்தில் இந்தியாவைப் பற்றி ஸ்டெய்ன்ஸிற்கு விவரித்து எழுதினார். சத்பதியின் எழுத்து ஸ்டெய்ன்ஸை 1965 - ஆம் ஆண்டு இந்தியாவிற்கு அழைத்து வந்தது. நண்பரைப் பார்க்க பாரிபாடாவுக்குப் புறப்பட்டு வந்தவர் அதன் பின் தன் நாட்டிற்குத் திரும்பாமல் இந்தியா என் தாய் வீடு என தங்கிவிட்டார். ஆஸ்திரேலிய தொழுநோய் மருத்துவ ஊழியம் என்ற சமுதாய சேவை நிறுவனத்தோடு தன்னை இணைத்து பணி செய்ய ஆரம்பித்தார். ஒரியா சந்தாலி மக்களை ஸ...