அக்டோபர் 22 ஆம் தேதி காலையில் விடியும் வேளை வந்து விட்டது என்று எண்ணி மூன்று மணிக்கே மிஷனெரி இராக்லாந்து படுக்கையை விட்டு எழுந்து விட்டார். நிலா வெளிச்சத்தை கிழக்கு வெறுப்பு என்று நினைத்தார். முந்தின இரவே பாளையங்கோட்டைக்கு அனுப்பவேண்டிய கடிதங்களை எழுதி முடித்திருந்ததால் கடிதங்களை பாளையங்கோட்டைக்கு கொண்டு போகும் நபரை எழுப்பி அக்கடிதங்களையும், சென்னைக்கு தபாலில் சேர்க்க வேண்டிய கடிதங்களையும் கொடுத்து அம்மனிதனை அனுப்பிவிட்டார். அதன் பின்னரே நேரத்திற்கு முன் தான் விழித்துக்கொண்டதை உணர்ந்தார். உடன் ஊழியர் ப்வெனும் விழித்துக்கொண்டார். அவர் இராக்லாந்திடம் "நேரம் இருக்கிறது, சற்று படுத்து உறங்குங்கள்" என்று கூற, "இல்லை, தூக்கம் போய்விட்டது" என்று கூறி தனது வேதாகமத்தை எடுத்து வாசித்து, தியானித்து, ஜெபிக்க உட்கார்ந்தார். ஒரு மணி நேரம் அதில் செலவிட்ட பின் அதிகாலை நேரம் ஆகிவிட்டதை அறிந்து வெளியே சென்று உலாவப் புறப் பட்டார். காலை ஆகாரம் அருந்திய பின் அவரும் ப்வெனும் அந்த வார வரவு செலவு கணக்குகளை தயாரிக்க உட்கார்ந்தனர். உடனே ராக்லாந்து நாம் இருவரும் இப்போது எழுத போகிறவைகளை ஆண்டவர் சமூகத்தில் நினைத்து அவருடைய ஆசீர்வாதத்திற்காக ஜெபிப்போம் என்று கூறி, யார் யாருக்கு கடிதங்கள் எழுத எண்ணினார்களோ அவர்களுக்காகவும், யார் யாரிடமிருந்து கடிதங்கள் வந்திருந்தனவோ அவர்களுக்காகவும் ஊக்கமாய் ஜெபித்து, அவர்களுக்கேற்ற பதில்களை எழுதுவதில் தெய்வ ஒத்தாசை வேண்டும் என்று மன்றாடினர். கடிதங்களையும் எழுதி முடித்தார்கள். அதன் பின்பு இராக்லாந்து அவற்றை பாளையங்கோட்டை க்கும், பனையடிப்பட்டி க்கும், ஸ்ரீவில்லிபுத்தூருக்கும் கூலி ஆட்கள் மூலம் அனுப்பினார். இவ்வேலைகளை செய்வதில் சற்று களைப்பு ஏற்பட்டதால் பின்பு கொஞ்ச நேரம் கட்டிலில் படுத்து இளைப்பாறினார். ப்வென் பக்கத்தில் அமர்ந்து அன்று வந்திருந்த பத்திரிகைகளை வாசித்துக் கொண்டிருந்தார். பகல் சுமார் ஒரு மணிக்கு வேலை ஆட்கள் ஜெபத்திற்கு ஆயத்தமானதும் இருவரும் பங்களாவிற்குள் சென்றனர். ப்வென் அன்று வாசிக்கவேண்டிய வேத பாகத்தை வாசித்து சில வார்த்தைகளை கூறி ஜெபம் செய்தார். ஜெபத்திற்கு முழங்கால் படியிடும் போது இராக்லந்து சற்று சிரமப் பட்டார். களைப்புற்றவராகவும் காணப்பட்டார்.
ஜெபம் முடிந்ததும் அவர் எழுந்து குளியலறைக்குள் சென்று ரத்த வாந்தி எடுக்க ஆரம்பித்தார். அதை கண்டு பதறிய ப்வென் இராக்லாந்தை கைத்தாங்கலாக கட்டிலின் அருகே கூட்டிக்கொண்டு வந்தார். வாயில் சிறு சிறு வேத வசனங்களையும் ஜெபங்களையும் உச்சரித்தவாறே இரட்சகரின் மார்பில் சாய்ந்தார். மரணத்தில் அவருடைய முகம், கவலையின்றி தூங்கும் குழந்தையின் முகம் போல உதடுகளில் புன்சிரிப்போடு காணப்பட்டது. அதை பார்த்துக் கொண்டு பக்கத்தில் அமர்ந்திருந்த ப்வென், " நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாய் இரு, தீங்கனுபவி, சுவிசேஷகனுடைய வேலையை செய், உன் ஊழியத்தை நிறைவேற்று... நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன், இது முதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்கு தந்தருளுவார்" என்று சொல்வது போல அவருடைய அழகிய முகத்தில் வசீகரம் காணப்பட்டதாக எழுதுகிறார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராங்க்ளர் (Wrangler )பட்டத்தைப் பெற்ற போதிலும் அவை தன் இருதயத்தை ஆக்கிரமித்து விடக்கூடாது என இராக்லந்து எண்ணினார். தேவன் தனக்கு கொடுத்த பொறுப்பை தன் வாழ்வின் இறுதி மூச்சுவரை உண்மையோடும் உத்தமத்தோடும் நிறைவேற்றி முடித்தார். இன்றும் நம்முடைய வாழ்க்கை ஓட்டம் எப்படிப்பட்டதாக இருக்கிறது? படிப்பு பதவி பணம் என அவற்றையே நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறோமா? கிறிஸ்து நம்மை கொண்டு செய்ய விரும்பி, நம்மிடம் ஒப்படைத்ததை செய்கிறோமா? சற்று சிந்தித்து பார்ப்போம்.
On the morning
of October 22, Missionary Ragland got out of bed at three o'clock, thinking
that dawn had come. He thought the moonlight was an abomination to the east. As
he had finished writing the letters to be sent to Palayangottai the previous
night, he woke up the person who was going to take the letters to Palayangottai
and sent the person with the letters and the letters to be included in the post
to Chennai. Only then did he realise that he had woken up prematurely.
Co-worker Bwen also wakes up. He said to Ragland, "There is time; lie down
a little and sleep," and he said, "No, sleep is gone," and he
took his Bible and sat down to read, meditate, and pray. After spending an hour
there, he realised that it was early morning and went out for a walk. After
breakfast, he and Bwen sat down to prepare the budget for the week. Immediately
Ragland said that we would both think about what we were going to write in the
community of the Lord and pray for His blessing. We prayed for those to whom we
intended to write letters and for those from whom letters had come, and we
begged for God's approval in writing answers to them. They also wrote letters.
After that, Irakland sent them to Palayamkot, Panayadipatti, and Srivilliputtur
through mercenaries. As he got a bit tired doing these jobs, he laid down on
the bed for a while and rested. Bwen was sitting next to him, reading the
papers that had arrived that day. At about one o'clock in the day, when the
workmen were ready for prayer, the two went into the bungalow. Bwen recited the
scripture that was to be read that day, said a few words, and prayed. Raglandu
had some difficulty kneeling for prayer. He also looked tired.
After the
prayer, he got up, went into the bathroom, and started vomiting blood.
Frightened by that, Bwen brought Ragland by the hand to the bed. He leaned on
the Saviour's chest, uttering small Bible verses and prayers in his mouth. His
face in death was seen with a smile on his lips, like the face of a carefree
sleeping child. Bwen, who was sitting by the side looking at it, said,
"You, be sober in all things, be a sufferer, do the work of an evangelist,
fulfil your ministry... "I have fought the good fight, I have finished the
race, I have kept the faith, the first crown of righteousness is laid up for
me, and the Lord, the righteous judge, will give it to me on that day," he
writes with a charm on his beautiful face. Despite receiving a Wrangler degree
from Cambridge University, England thought that it should not occupy his heart.
He fulfilled the responsibility given to him by God faithfully and faithfully
till the last breath of his life. How does our life flow today? Are we running
towards them like education and money? Are we doing what Christ wants us to do
and has entrusted to us? Let's think about it.
Thank you for sharing. Great testimonies.
ReplyDeletePraise God
DeleteThank you for sharing this sister.
ReplyDeletePraise God for the life of great missionaries
ReplyDelete