மாம்பழச் சங்க விழா Mambala Changam (Tamil & English)

தென்னகத்தின் மீட்பிற்காக மேலை நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு மிஷனரிகளாக வந்த பல போதகர்கள்,  அறிஞர்கள் மற்றும் மருத்துவர்கள் அரும் பெரும் தொண்டாற்றினார்கள்.  அவர்களின் முயற்சிகளுக்கு பலனாகவே இன்று தென் தமிழகத்தில் பல நூறு பள்ளிக்கூடங்கள்,  ஆலயங்கள்,  சமுதாய மேம்பாட்டுப் பணிகள் போன்றவை என்றும் அழியாது உயர்ந்து நிற்கிறது. “திருநெல்வேலியின் அப்போஸ்தலன்” என்று அழைக்கப்பட்ட முன்னோடி ஊழியர் ரேனியஸ் ஐயர் அவர்கள் இத்தகைய சிறப்புமிக்க தொண்டாற்றியது மட்டுமல்லாது, மக்கள் மனதில் பதிந்திருந்த ஜாதிவெறி,  மூடநம்பிக்கைகள்,  ஏற்றத்தாழ்வுகள் போன்றவற்றிலிருந்து விடுதலை பெற அதிக முயற்சி எடுத்தார். அக்காலத்தில் புதிதாக இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட மக்களுக்கு பிற மதத்தினரால் கடும் உபத்திரவம் ஏற்பட்டது. எனவே அப்பகுதிகளில் மிஷன் சார்பில் நிலங்களை வாங்கி, அங்கு புதிய கிறிஸ்தவர்களை குடியேறும் படி செய்தார். இதனால் டோனாவூர் உட்பட சுமார் 25 கிறிஸ்தவ கிராமங்கள் ரேனியஸ் ஐயர் அவர்களால் உருவாக்கப்பட்டது. இக்கிராமங்களில் செயல்பட்டுவந்த சபைகளில் பல ஒழுங்குமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அனுதினமும் காலை மாலை ஆராதனை,  தேவ செய்தி,  ஆசிரியர் பணியுடன் கூடிய சபை ஊழியர், ஓய்வு நாள் அரிசி காணிக்கை திட்டம், ஒரு நாள் வருமான காணிக்கை படைத்தல்,  ஆலய பரிபாலன நிதித்திட்டம்,  மாம்பழ சங்கம்  போன்றவை இன்று வரை மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

 1832 ஆம் ஆண்டு டோனாவூர் சேகரத்தில் ஏற்பட்ட காலரா நோயினால் மக்கள் பலர் உயிரிழந்தனர். இதனால் பலர் அனாதைகளாகவும், பல பெண்கள் விதவைகளும் ஆயினர். அவர்களுக்கு உதவ “டோனாவூர் சேகர சகாய நிதி” ஆரம்பிக்கப்பட்டது. இந்நிதி உதவியால் கிறிஸ்தவ சபைகளில் இருந்த ஏழை கைம்பெண்கள் பயன்பெற்றனர். இதன் பின்பு ஊழியரின் மனைவிகள் விதவைகளாக நேரிடின் அவர்களது பராமரிப்புக்காக ரேனியஸ் பல திட்டங்களை தீட்டினார். 1834 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற மாதாந்திரக் கூட்டத்தில் “திருநெல்வேலி C.M.S. உபதேசிமார் உபாத்திமார்  கைம்பெண் நிதியை”ஆரம்பித்தார். அதற்கு ஊழியரே உதவ வேண்டுமென ரேனியஸ் கேட்டுக்கொண்டார்.  அடுத்த மாத(ஜூலை மாதம்) மாதாந்திர கூட்டத்தில் ஊழியர்களின் மனைவிகளும் பங்கேற்று சிறப்பு காணிக்கை சேகரிக்க  கேட்டுக்கொண்டனர். 

அப்படியே 1834 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒன்பதாம் தேதி புதன்கிழமை அன்று சங்க கூட்டம் நடைபெற்றது. அனைத்து சபை உபதேசிமாறும் உபாத்திமாரும் தங்கள் மனைவியருடன் பாளையங்கோட்டைக்கு வந்தனர்.  மத்தியான வேளையில் அனைவரும் ஆலயத்தில் ஸ்தோத்திர ஜெபம் ஏறெடுத்தனர். ரேனியஸ் ஐயர் பிரசங்கித்து,  ஜெபத்துடன் சங்கத்தை தொடங்கி வைத்தார். அன்றைய நாட்களில் மாம்பழ விளைச்சல் அதிகமாக இருந்ததால் இக்கூடுகைக்கு “மாம்பழ சங்கம்“ எனப் பெயரிடப்பட்டது. அன்று நிறுவப்பட்ட சங்க ஸ்தோத்திர கூட்டம் வருடந்தோறும் ஜூலை மாதம் 9ஆம் தேதியிலாவது அல்லது அதற்கு சமீபித்த புதன் கிழமையிலாவது நடைபெற்று வருகிறது. “ மாம்பழ சங்கம்” என்றும் “திருநெல்வேலி அத்தியட்சாதின கைம்பெண் சங்கம்” எனவும் அழைக்கப்பட்டு வந்தது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரமாயிரம் விதவைகள் மற்றும் பெண்கள் பயன் பெற்று வருகின்றனர்.
 அயல்நாட்டில் இருந்து வந்த ஒரு மனிதன் தென் தமிழக மக்கள் மேல் இவ்வளவு அக்கறையுடன் பணி செய்ய முடியும் என்றால், இங்கேயே பிறந்து வளர்ந்த நமக்கு எத்தனை அதிகமான பாரம் ஏற்பட வேண்டும்? அவர் விட்டுச் சென்ற பணிகளை இன்று நாம் எத்தகைய தரிசனத்தோடு கடைப்பிடித்து வருகிறோம்?  ஆண்டவர் பாதத்தில் அமர்ந்து,  நம்மை நாமே சற்று ஆராய்ந்து பார்த்து அர்ப்பணிப்போம். 

ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள். 
1 கொரிந்தியர் 10:31

Many preachers, scholars, and doctors who came to India as missionaries from western countries also made great contributions to the salvation of South Asia. As a result of their efforts, hundreds of schools, temples, community development works, etc. are standing forever in South Tamil Nadu today. Rhenius Iyer, the pioneer worker who was called the “Apostle of Tirunelveli,” not only did outstanding philanthropy but also tried hard to free people from casteism, superstitions, and inequalities. At that time, the people who had recently accepted Jesus Christ faced severe persecution from other religions. So he bought lands on behalf of the mission in those areas and settled new Christians there. Thus, about 25 Christian villages, including Donavur, were created by Rhenius Iyer. Many regulations were introduced in the congregations that were functioning in these villages. Daily morning and evening worship, God's message, church staff with teaching duties, sabbath rice offering scheme, one-day income offering, temple maintenance fund scheme, mango association, etc. are being followed by the people till date.

In 1832, a cholera outbreak in Donavur Lake killed many people. As a result, many became orphans, and many women became widows. To help them, “Donavur Sekara Sakaya Nithi” was started. The poor maids in the Christian congregations were benefited by this financial assistance. After this, Rhenius devised several schemes for the maintenance of the servants' wives as widows. At the monthly meeting held in June 1834, “Tirunelveli C.M.S.Upadeshimar Upadimar started the Kaimbena Fund. Rhenius asked the staff to help him. The wives of the employees also participated in the monthly meeting of the next month (July) and were asked to collect a special offering.

 Accordingly, a meeting of the society was held on Wednesday, the ninth day of July, 1834. All the congregational preachers came to Palayamkottai with their wives. At midday, everyone offered a prayer of praise in the temple. Rhenius Iyer preached and opened the association with a prayer. The gathering was named “Mango Sangam” because of the high yield of mangoes in those days. The Sangha Stotra meeting established on that day is held every year on or near the 9th of July. It used to be called “Mango Sangam” and “Tirunelveli Athiyatsadina Kaimben Sangam”. Every year, thousands of widows and women are benefited by this. If a man from a foreign country can work with such concern for the people of South Tamil Nadu, how much more burden should we be born and brought up here? With what vision are we following the work he left behind today? Let us sit at the Lord's feet and devote ourselves a little.

Therefore, whether you eat or drink, or whatever you do, do it all to the glory of God.

(1 Corinthians 10:31)

 

 

 


Comments

Popular posts from this blog

குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!

கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் Graham Staines

வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)