ஏமியும் அவள் அம்மாவும் சிற்றுண்டி சாலையில் அமர்ந்து இருந்தார்கள். வெளியே மழையோடு குளிரும் வாட்டி கொண்டிருந்தது. வித விதமான உணவுகள் கண்ணாடி பெட்டியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. ஏமியின் விருப்பத்திற்கு ஏற்ப அவள் தாய் அவளுக்கு கேக்குகளை வாங்கி கொடுத்தார். வெளியே மழை கொட்டோ கொட்டு என கொட்டி கொண்டிருந்தது. ஏமி அவள் வயதையொத்த ஒரு சிறுமி கடைக்கு வெளியே நின்று கொண்டிருப்பதை கண்ணாடி வழியாக கவனித்தாள். கிழிந்த ஆடையோடு காலில் செருப்பில்லாமல், தலையில் குளிருக்கு போடும் குல்லாவும் இல்லாமல் உடல் நடுங்கி நின்று கொண்டிருந்தாள். பசியின் கொடுமையினால் ஜன்னல் வழியாக பலகாரங்களை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்த அச்சிறுமியின் காட்சி ஏமியின் சிறிய உள்ளத்தை அதிகம் பாதித்தது. வீட்டிற்கு வந்து குளிர்காயும் அடுப்பின் அருகில் தன் உடைகளையும் காலணிகளையும் சூடாக்கி கொண்டிருந்த ஏமி, திடீரென்று எழுந்து ஒரு பென்சிலை எடுத்தாள்.
நான் வளரும்போது
என் கையில் பணம் வரும்போது உன்னை போன்ற ஏழை சிறுமிகளுக்கு அழகிய பெரிய இன்பமான வீடு ஒன்றை கட்டுவேன்
என அதில் எழுதினாள். ஏமியின் லட்சியம் இப்படி காகிதத்தில் எழுதியதோடு முடிந்து போகவில்லை.
அயர்லாந்தில் பிறந்து வளர்ந்த ஏமி கார்மைக்கேலின் கண்கள் தன் நண்பர்களைப் போல பிரவுன் கலரில் இல்லாமல், இந்தியர்களை போல கருமையாக இருந்தது. அநேக முறை தேவனிடம் அதை மாற்றும்படியாக கெஞ்சியும் பதில் இல்லை. ஆனால் அதற்கும் ஒரு நோக்கம் உண்டு என்பதை பின்னாளில் அறிந்து கொண்டார்.
தேவன் அவரை முழு நேர பணிக்கென அழைத்தபோது, இந்திய மக்களைக் குறித்ததான பாரம் அதிகம் பாதித்தது.
இந்தியா புறப்பட்டு வந்த ஏமி இந்திய கலாச்சாரத்திற்கு ஏற்ப தன் நடை, உடைகளை மாற்றிக் கொண்டார். தேவன் தனக்கு கொடுத்த கருப்பு நிற கண்களின் காரணத்தையும் புரிந்து கொண்டார். சாலைகளில் அனாதையாக சுற்றித்திரியும் ஒரு குழந்தையை காப்பாற்ற, பல மைல் தூரம் சுடும் வெயிலில் தன் கால்களால் தினமும் நடந்து அலைந்தார். அனாதை சிறுவர்களுக்கு என டோனாவூரில் குழந்தைகள் சரணாலயம் அமைத்து சேவை செய்தார். இன்று ஆயிரக்கணக்கான பிள்ளைகள் இதன் மூலம் பயன் பெற்று வருகின்றனர். 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் மருத்துவமனையை கட்டி மக்களுக்கு உதவி செய்தார். 83 ஆண்டுகாலம் உயிரோடு வாழ்ந்த இந்த அம்மையார், 56 ஆண்டுகளை இந்திய மண்ணிலேயே செலவிட்டார். படுக்கையில் இருந்த 20 ஆண்டுகளில் சுமார் 38 புத்தகங்களை எழுதினார். தன் வாழ்வின் கடைசி வரை திருமணம் செய்யவில்லை என்றாலும் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு தாயாக வாழ்ந்தார்.
இன்றும் நம்முடைய வாழ்க்கையைக் குறித்த உயர்ந்த லட்சியம் நமக்கு உண்டா?
Amy and her
mother were sitting in the snack bar. It was raining and cold outside.
Different kinds of food were arranged in a glass box. According to Amy's wish,
her mother bought her cakes. It was raining heavily outside. Through the glass,
Amy noticed a little girl about her age standing outside the store. She was
standing shivering with torn clothes, no sandals on her feet, and no hat to put
on her head against the cold. The sight of a little girl looking longingly at
the various things through the window because of hunger affected Amy's little
heart. Amy, who had come home and was warming her clothes and shoes by the cold
stove, suddenly got up and picked up a pencil. When I grow up and have money in
hand, I will build a beautiful, big, comfortable house for poor girls like me.
She wrote in it. Amy's ambition didn't end with just writing it down on paper.
Born and raised
in Ireland, Amy Carmichael's eyes were not brown like her friends' but dark
like Indians. Many times she pleaded with God to change it, but there was no
answer. But later, she learned that it also had a purpose. When God called him
to full-time work, the burden on the people of India weighed heavily. After
leaving India, Amy changed her style and clothes according to Indian culture.
She also understood the reason for the black eyes God had given her. To save a
child who was wandering the streets as an orphan, she walked many miles on his
feet every day in the scorching sun. She set up a children's sanctuary in
Donavur for orphans. Today, thousands of children are benefiting from this. She
helped the people by building a hospital on 400 acres. This mother, who lived
for 83 years, spent 56 years on Indian soil. She wrote about 38 books during
her 20 years in bed. Although she never married until the end of her life, she
lived as a mother to thousands of children.
Do we still have
higher ambitions for our lives today?
Comments
Post a Comment