லோத் கேரி (1780-1828) Lot Carey ( Tamil & English)
லோத் கேரி ஒரு பாப்திஸ்து சபை போதகர். 1820ல் லைபீரிய காலனி உருவாக ஒரு காரணமாக செயல்பட்டார். 1780 இல் வெர்ஜீனியாவில் உள்ள சார்லஸ் சிட்டி என்ற நகரில் அடிமையாக பிறந்ததால் ஜான் பௌரி என்பவரிடம் அடிமையாக வாழ்ந்து வந்தார். இவரது எஜமான் ஒரு மெத்தடிஸ்ட் போதகர் என்பதால் கேரிக்கு கொஞ்சம் சுதந்திரம் கிடைத்தது. 1807 ஆம் ஆண்டு ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை ஆராதனையில் கொடுக்கப்பட்ட செய்தி இவருக்குள் மிகுந்த தாக்கத்தை உண்டாக்கியது. “நீ மறுபடியும் பிறக்க வேண்டும்“ என்ற வாக்கியம் மீண்டும் மீண்டும் அவள் செவிகளில் ஒலித்து, இருதயத்தில் கிரியை செய்ய ஆரம்பித்தது. இதன் விளைவாக அவர் ஒரு புது மனிதனாக மாற்றம் பெற்று, மாபெரும் மகிழ்ச்சியையும், ஈடு இணையில்லா சந்தோஷத்தையும் தரும் இரட்சிப்பின் அனுபவத்தையும் பெற்று கொண்டார். கேரி ரிஷ்மனன் என்னும் பகுதியில் அமைந்த முதல் பாப்திஸ்து சபையில் இணைந்தார். அது வெள்ளை மற்றும் கருப்பு இன அடிமைகள் மற்றும் சுயாதீன ரின் சபையாக இருந்தது. அக்காலத்தில் நடந்த சமூக மற்றும் சமய சீர்திருத்தங்களின் காரணமாக அநேக மெத்தடிஸ்ட் ...