கேரியின் டைரி, William Carey's Diary entry (Tamil & English)
கேரியின் ஒரு நாள் தினத்திட்டத்தை பார்த்தாலே போதும், அவர் எவ்வளவு கடின உழைப்பாளி என்பதை நிதானிக்க முடியும். * 5.30 மணிக்கு துயில் எழுந்தேன். * எபிரேயர் நிருபத்தில் ஒரு அதிகாரம் படித்தேன். * பின் 7 மணி வரை ஜெபித்தேன். * பின்னர் பெங்காலி மொழியில் குடும்ப ஜெபம் நடத்தினேன். * தேநீர் தயாரிக்கும் போதே பெரிசிய மொழிப் பயிற்சியை தொடர்ந்தேன். * பின் காலை உணவுக்கு முன் இந்துஸ்தான் மொழியை கற்றுக் கொள்வதில் கவனம் செலுத்தினேன். * காலை உணவு முடிந்ததும் 10 மணி வரை இராமாயணத்தை சமஸ்கிருத பண்டிதரின் உதவியோடு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தேன். * பின் ஆசிரியப் பணிக்கென்று அரசு கல்லுரிக்குச் சென்றேன். *1.30 மணிக்கு மதிய உணவு எடுத்தேன். *2 மணிக்கு பெங்காலி மொழியில் எரேமியா தீர்க்கதரிசன புத்தகத்துக்கான அச்சுப் பிழைத்திருத்தம் செய்தேன். * பின் சமஸ்கிருத மொழியில் மத்தேயு 8ஆம் அதிகாரத்தை 6மணி வரை மொழி பெயர்த்தேன். * பின் தெலுங்கு பண்டிதரின் உதவியுடன் தெலுங்கு கற்றுக்கொண்டேன். * 7.30 மணிக்கு பிரசங்கம் செய்தேன். * 9மணிக்கு மேல் எசேக்கியேல் 11ஆம் அதி...