Posts

Showing posts with the label Arthur Margochis

ஆர்தர் மர்காஷிஸ் Arthur Margochis (Tamil & English)

Image
ஆர்தர் மூச்சுவிடத் திணறிக் கொண்டிருந்தான் . இடையிடையே , வெளிப்பட்ட இருமல் வேறு அவனை அதிகத் தொந்தரவு செய்தது . பெலவீனமான நிலையில் இப்படி தனியாக மாட்டிக் கொண்டோமே என்று எண்ணிய போது வருத்தமாக இருந்தது ஆர்தருக்கு . இதுவே வீடாக இருந்தால் இந்த சமயங்களில் அம்மாவாவது உடன் இருப்பார்கள் . துணையாக இருந்த நண்பன் ஜோசாவும் நேரமாகி விட்டதால் தன் இருப்பிடத்திற்கு சற்றுமுன் சென்று விட்டான் . கட்டிலில் மல்லாக்க படுத்துக் கிடந்த ஆர்தர் கதவு ஜன்னல்களை எட்டிப்பார்த்தான் . வெளியே பனி கொட்டிக் கொண்டிருப்பதால் அவைகளெல்லாம் சாத்தியிருந்தது . எதிரே கிடந்த மேஜையை எட்டிப் பார்த்தான் . மேஜை மீது தட்டில் பழ வகைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது . இன்னொரு புறம் அவனுக்குரிய மருந்து பாட்டில்களும் இருந்தன . மருந்து பாட்டில்களை பார்த்த போது ஆர்தருக்கு வெறுப்பாக வந்தது . இன்னும் எத்தனை நாட்கள் தான் இந்த மருந்து மாத்திரைகளை சாப்பிடுவது என அலுத்துக் கொண்டான் . ஆர்தர் , பதினேழரை வயது நிரம்பிய இளம் வாலிபன் . அவனுடைய பெற்றோருக்கு எட்டுக் குழந்தைகள் . அதில் கடைக்குட்டி ஆர்தர்தான் . எட்டாவது பிறந்த அவனை ஈன்றெடுக்கும் போதே அவனது ...