FRANCIS ASBURY ஆஸ்பரி (Tamil & english)

 ஆஸ்பரி 1770 களில் வாழ்ந்த ஒரு மெத்தடிஸ்ட் சபை பிரசங்கியார். சுற்று சவாரி பிரசங்கி ( Itinerant Preacher) என்னும் முறையை ஆத்துமாக்களை கிறிஸ்துவுக்குள்ளாக ஆதாயப்படுத்த பயன்படுத்தியவர் இவர். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10000 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்தார். இவ்வாறு 50 ஆண்டுகள் குதிரையில் சுவிசேஷ பணியை செய்து வந்தார். சரீரத்தில் சுகவீனம் இருந்தாலும் அதை ஒரு பொருட்டாக எண்ணாமல் நீண்டகாலம் கெட்டுப்போகாத ஒரு உணவினால் தன்னை பலப்படுத்திக் கொண்டு ஆத்தும ஆதாய பணியை செய்து வந்தார். அமெரிக்காவில் குடியேறிய ஆங்கிலேய குடியிருப்புகளில் இருந்தவர்களை ஆண்டவருக்குள் வழிநடத்த இந்த குதிரை சவாரி முறையை பயன்படுத்தினார். ஆங்காங்கே ஆலயங்களையும் கட்டி எழுப்பினார். 1771ம் ஆண்டு ஆஸ்பரி இந்த குடியிருப்பு பகுதிக்கு வந்த பொழுது முழு அமெரிக்காவிலும் 600 மெத்தடிஸ்ட் கிறிஸ்தவர்களே இருந்தனர். ஆனால் இவர் ஊழியம் செய்த 45 வருடங்களுக்குப் பின்னர், அந்த தொகை இரண்டு இலட்சமாக பெருகியது. அவரைப் போல 700 சுற்று சவாரி பிரசங்கிமார்களை எழுப்பினார். 

 அவருடைய சுவிசேஷப் பணி கிட்டத்தட்ட பவுல் அப்போஸ்தலனின் முறைகளைப் போலவே இருந்தது. பவுல் தான் ஆரம்பித்த தெசலோனிக்கேய சபைக்கு எழுதும் பொழுது, "உங்களிடத்திலிருந்து கர்த்தருடைய வசனம் மக்கெதோனியாவிலும், அகாயாவிலும் தொனித்ததுமல்லாமல் எங்கும் பிரசித்தம் ஆயிற்று" என்று 1 தெசலோனிக்கேயர் 1:8ல் எழுதுகிறார். அதே போலத்தான் ஆஸ்பரி செய்த ஊழியத்தின் மூலம் பல நாட்டு மக்கள் இயேசு கிறிஸ்துவை அறிந்து கொண்டனர். எப்படிப்பட்ட விதத்திலும் சுவிசேஷத்தை அறிவிக்கலாம் என்பதற்கு ஆஸ்பரி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

பாவ வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருந்த நம்மையும் தாயின் கருவில் உருவாவதற்கு முன்னரே தேவன் தெரிந்துகொண்டார். மீட்டெடுத்ததற்கான காரணம் என்ன? அவருடைய பிறப்பைக் குறித்து தெளிவு இல்லாது இருக்கிற மக்களுக்கு பிறப்பின் நற்செய்தியை கூறவே நம்மை தெரிந்தெடுத்தார். ஒருவேளை சுற்று சவாரி பிரசங்கியார்களின் காலம் முடிந்து மறைந்திருக்கலாம். ஆனால் நம் ஒவ்வொருவருக்கும் நண்பர்கள், உறவினர்கள், அயலகத்தார்கள் என அநேகர் உண்டு. நமது சுவிசேஷப் பணிக்கான முதல் படி இவர்களே. சற்று யோசித்துப் பார்ப்போம். ஆண்டவர் கிருபையாய் நமக்கு கொடுத்த இந்த மாதத்தை எப்படி செலவழித்தோம்? எத்தனை நபர்களுக்கு இயேசு கிறிஸ்துவை அறிமுகப்படுத்தி உள்ளோம்? மற்றவர்களுக்கு முன்னால் சாட்சியுள்ள வாழ்க்கை வாழ்ந்துள்ளோமா? நம்முடைய தாலந்துகளை தேவனுக்காக செலவழித்துள்ளோமா? கிறிஸ்தவன் / கிறிஸ்தவள் என்ற பதத்திற்கு ஏற்றபடி நம்முடைய வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கிறதா? சற்று சிந்திப்போம். 

Asbury was a Methodist preacher who lived in the 1770s. He used the method of the itinerant preacher to win souls to Christ. He travelled about 10,000 kilometres every year. Thus, he did evangelistic work on horseback for 50 years. Although he was sick in his body, he did not consider it an object and strengthened himself with food that did not spoil for a long time and did the work of spiritual gain. He used this method of horseback riding to lead the English settlers in America to the Lord. He also built temples here and there. When Asbury arrived in this settlement in 1771, there were only 600 Methodist Christians in all of America. But after 45 years of his ministry, that amount increased to Rs. 2 He raised 700 horseback preachers like him.

 His evangelism was almost identical to that of the Apostle Paul. Paul writes in 1 Thessalonians 1:8 when he wrote to the church in Thessalonica that he started, "The word of the Lord from you has spread everywhere, except in Macedonia and Achaia." In the same way, many people in the country came to know Jesus Christ through Asbury's ministry. Asbury is a great example of how to evangelise in any way possible.

God knew us even before we were born in the womb of our mother, who was living a sinful life. What is the reason for recovery? He introduced us to telling the good news of his birth to people who were not clear about his birth. Perhaps the days of itinerant preachers are over. But each of us has many friends, relatives, and neighbours. They are the first step in our mission of evangelism. Let's think about it. How did we spend this month that the Lord has graciously given us? How many people have we introduced to Jesus Christ? Have we lived a life of witnessing before others? Have we spent our talents for God? Are our lives meaningful according to the term? Let's think about it.

Comments

Popular posts from this blog

வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)

பக்த்சிங் Bakht Singh

குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!