எட்வர்ட் ஜார்ஜென்ட், Edward Sargent
.jpeg)
கிறிஸ்து இரத்தம் சிந்தி சம்பாதித்து தந்த திருச்சபையை பேணிக் காப்பதில் முக்கிய பங்கு வகித்தவர் பேராயர் எட்வர்ட் சார்ஜென்ட். அவர் 1835 - ஆம் ஆண்டு நெல்லை பட்டணத்தில் தன்னுடைய ஊழியத்தை ஆரம்பித்தபோது இங்கு 224 திருச்சபைகள் இருந்தது. ஆனால் அவர் மரிக்கும்போது, அதாவது 1889 - ஆம் ஆண்டு அங்கிருந்த திருச்சபைகளின் எண்ணிக்கை 1008 ஆகும். திருச்சபையின் வளர்ச்சிக்கு வித்திட்டவர். அதுமட்டுமல்ல, சபைகள் அனைத்தையும் கிறிஸ்துவில் வேரூன்றச் செய்தவர். போதகர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை அதிகம் நேசித்தவர். அவர்களது குறைகளை நீக்கி, மகிழ்ச்சியோடு தேவனுக்காக பணி செய்ய ஊக்குவித்தவர். வாட்டர் லூ போரில் ஈடுபட்ட ஒரு போர் வீரனின் மகன் தான் எட்வர்ட் ஜார்ஜென்ட் - அப்பட்டாளம் இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட போது சார்ஜென்ட் தன் பெற்றோருடன் வந்தார். போரில் அவரது தகப்பனார் மரித்து விட்டார். தனிமையிலிருந்த தாயார் தன் மகனை சென்னை இராணுவ குரு அருள்திரு. சாயர் அவர்களின் பொறுப்பில் விட்டுவிட்டு தன் தாய்நாட்டிற்குச் சென்றார். 1815 - ஆம் ஆண்டு அக்டோபர் 16 - ஆம் நாள் பாரீஸ் மாநகரத்தில் பிறந்த சார்ஜென்ட், சிறு வயதிலேயே ...