Alexander Duff (Tamil &English)
1806 - ஆம் ஆண்டு ஏப்ரல் 25 - ஆம் தேதி ஜேம்ஸ் டப்ஃக்கும் ஜின் ராட்ரேக்கும் பிறந்த அலெக்ஸாண்டர் டப்ஃ என்பவர் தனது பள்ளி நாட்களில் முதல் மாணவனாகவும் படிப்பில் சிறந்தவனாகவும் காணப்பட்டார். டாக்டர். சாமர்ஸ் என்ற தலை சிறந்த ஆசிரியரின் மாணவனாக இருந்த அவர் கல்லூரியிலேயே முதல் மாணவனாக வெளிவந்தார். சீனாவின் மிஷனெரியாகப் பணிபுரிந்து வந்த டாக்டர் மோரிஸனுடன் நெருங்கிய தொடர்பு உடைய தனது தோழன் ஜான் உர்க் ஹார்ட் மூலம் மிஷனெரி பணிக்கு செல்லும் விருப்பத்தை பெற்றார். 1827- ஆம் ஆண்டு முழுநேர பணிக்கென்று தன்னை ஒப்புக் கொடுத்திருந்த தன் நண்பன் மறுமைக்குள் செல்லவே, அவரது தோழன் அலெக்ஸாண்டர் டப்ஃ அப்பணியில் நுழைய முடிவு செய்தார். புனித ஆன்டிரூஸ் பேராயம் மூலம் பிரசங்கிக்கும் அனுமதி பெற்ற இவர் 1829 - ஆம் ஆண்டு, ஸ்காட்லாண்டு திருச்சபையின் மூலம் கிடைத்த அழைப்பிற்கிணங்கி கல்கத்தாவிற்கு மிஷனெரியாக செல்ல முடிவு செய்தார்; ஆகஸ்டு 12 - ஆம் தேதி அன்று டாக்டர் சாமர்ஸ் மூலமாக ஆனி ஸ்காட்டிரிஸ்டேல் என்ற அம்மையாருடன் திருமணத்தில் இணைந்ததுடன், அன்றைய தினமே, புனித ஜார்ஜ் ஆலயத்தில் போதகராக அபிஷேகம் செய்யப் பெற்றார். இரண்டு...