John Scudder (Part I) first American Medical Missionary in India (Tamil & English)
இன்று இந்தியாவில், குறிப்பாக வேலூரில் புகழ் பெற்று விளங்கும் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரியைப் பற்றி அறியாதவர் எவரும் இருக்க முடியாது. அக்கல்லூரியை தோற்றுவித்த டாக்டர் ஐடா ஸ்கடரின் வாழ்வு நம் அனைவரையும் கவர்ந்தது என்றே சொல்லலாம். மருத்துவ வசதி கிடைக்காத ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றியும், அநேக மருத்துவர்களை உருவாக்கியும் வாழ்ந்து மறைந்தவர். கிராமப் புற சுகாதார மையங்களை ஏற்படுத்தி, மக்களின் வாழ்வை தூய்மையாக்கிய தோடு, கிறிஸ்துவின் அன்பையும் அவர்களுக்கு கொடுத்தவர். இவரால் தாதியர் பயிற்சி பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டு, அநேக பெண்களுக்கு பயிற்சி அளித்ததால், அநேக பெண் மருத்துவர்கள் உருவாக்கப்பட்டனர். உலகமே இவரை போற்றுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், இவருடைய பெற்றோர், பெற்றோரின் பெற்றோர் என அவருடைய குடும்பம் அதி முக்கிய காரணம் என்றால் மிகையாகாது. அவர்களின் முறையான பிள்ளை வளர்ப்பு, இந்த உலகமே திரும்பி பார்க்கும் உயர்ந்த பெண் மணியாக டாக்டர் ஐடா ஸ்கடரை மாற்றியது. தேவனுக்கு பணி செய்வதையே அவர்கள் தங்களுடைய வாழ்வின் முக்கிய குறிக் கோளாக கொண்டு இருந்தார்கள். எக்காரணம் கொண்டும், கிறிஸ்துவின் மேலுள்ள தங்கள் அன்பை விட்டு கொடுக்க வில்லை. இக்கட்டுரையில் டாக்டர் ஐடாவின் தாத்தா டாக்டர் ஜான் ஸ்கடரைப் பற்றி பார்க்கலாம்.
டாக்டர் ஜான் ஸ்கடர் 3.9.1793 அன்று அமெரிக்காவின் நியுஜெர்சி மாகாணத்தில் பிறந்தார். நியுயார்க்கில் தனது மருத்துவபடிப்பை முடித்த இவர் அங்கேயே பணியாற்றியும் வந்தார். அவருடைய திறமையும், உதவும் குணமும் அநேகரை கவர்ந்ததோடு, நல்ல வருமானத்தையும் ஈட்டித் தந்தது. வருடத்திற்கு 2000 டாலர் பணம் சம்பாதித்து வந்த வேளையில் (அன்று இது மிகப் பெரிய காரியம்) ஒரு நாள் நோயாளி ஒருவரை சந்திக்க சென்றார். அங்கு மேஜையில் இருந்த “60 கோடி மக்களின் மன மாற்றத்திற்கு திருச்சபைகள் என்ன செய்ய வேண்டும்”என்ற கைப்பிரதியை வாசித்தார். இலங்கை மற்றும் இந்தியாவில் சுவிசேஷ பணியின் அவசியத்தைக் கூறும் அக்கைப்பிரதியை வாசித்த அவர், யாராவது இத்தேவையை சந்திக்க முன்வரமாட்டார்களா? என தன் இருதயத்தில் யோசித்த அடுத்த நிமிடத்திலேயே, "நீ சென்றால் என்ன ?" என்று தேவன் பேசுவதை உணர்ந்தார். அந்நேரமே "ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் "என்று கேட்ட போது, கிராமங்கள் தோறும் சென்று, எங்கும் சுவிசேஷத்தை பிரசிங்கித்து பிணியாளிகளை குணமாக்க...( லூக்கா 9:6)தேவன் தன்னை அழைப்பதை உணர்ந்து தன் வாழ்வை அவருக்கென அர்ப்பணித்தார்.
வீட்டிற்கு வந்து தன் மனைவி ஹரியட்டிடம் தன் அர்ப்பணிப்பை பற்றி கூறினார். இருவரும் சேர்ந்து பல நாட்கள் ஜெபித்தார்கள். தங்கள் குடும்ப வரலாற்றில் இது வரை யாரும் தேவனுக்கென ஊழியம் செய்ய முன் வரவில்லை. அதிலும் நாடு கடந்து மிஷினெரி பணி செய்வதை பற்றி கேள்விபட்டதேயில்லை. அவருடைய தகப்பனாரோ ஒரு வழக்கறிஞர். அவ்வாறு இருக்கும் போது, தேவன் தங்களை அழைத்ததற்கான நோக்கத்தை நிறைவேற்ற ஜான் ஸ்கடரும் அவரது மனைவியும் துணிந்து முன் வந்தார்கள். இதை பற்றிய தன் முடிவை தன் தகப்பனாரிடம் கூறிய போது, எதிர்கும் வார்த்தைகள் அவரிடமிருந்து அனல் கொண்டு வந்தது."அமெரிக்காவில் உனக்கு இவ்வளவு பிரகாசமான எதிர்காலம் இருக்கும் போது, கடல் கடந்து அதுவும் சுகாதாரமற்ற இந்தியாவிற்கு நீ ஏன் செல்ல வேண்டும்" என கேள்வி எழுப்பினார். அவருடைய நெருங்கிய நண்பர்கள் கூட எதிர்த்தார்கள். எனினும் கிறிஸ்துவுக்காக சேவை செய்வதே பாக்கியம் என முடிவெடுத்து மிஷினெரிகளை அனுப்பி ஆதரிக்கும் "American Board of Commissioners "யை சந்தித்து தன் தீர்மானத்தை கூறினார்.
1819 ம் ஆண்டு டாக்டர் ஜான் ஸ்கடர் தன்னுடைய 25ம் வயதில் தன் மனைவி ஹரியட் மற்றும் தன் சிறுமகள் மரியாவுடன் கப்பல் பயணத்தை தொடர்ந்தார். கப்பல் பயணம் கடினமாக இருந்தாலும் கப்பல் ஓட்டுனர் மற்றும் அங்கிருந்த அனைவருக்கும் சுவிசேஷத்தை கூறினார் .அவர்களும் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு இரட்சிக்கப்பட்டனர். எபிரேயர் 11:8ல் படி "விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்திரமாகப் பெறப் போகிற இடத்திற்குப் போகும் படி அழைக்கப்பட்ட போது, கீழ்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப் போனான்" என்று ஆபிரகாம் புறப்பட்டு சென்றது போல டாக்டர் ஜான் ஸ்கடரும் புறப்பட்டு போனார். கப்பல் கல்கத்தாவின் செராம்பூரில் கரை சேர்ந்த போது,ஜான், அங்கு பணி புரிந்து வந்த வில்லியம் கேரியை சந்தித்தார். அவரிடம் இருந்த சில காலங்கள், ஜானை உற்சாகப்படுத்தியதோடு, தீவிரமாக ஊழியம் செய்யவும் உந்தித் தள்ளியது. ஒரு நாள் அவரது மகள் மரியா சுகவீனமாகி மூன்று நாட்களில் மரித்துப் போனாள். எனினும் சோர்ந்து போகாமல் முன் சென்றார். இலங்கைக்கு உடனடியாக மாற்றப்பட்டு அங்குள்ள ஜேப்னா என்ற மாவட்டத்தில் தன் பணியைத் தொடங்கினார். அங்கு அடுத்ததாக அவர்களுக்கு பிறந்த மகளும் பிறந்தவுடனையே மரித்துப் போனது. அதன் பின்பு, பிறந்த மகனும் அவ்வாறே மரித்துப் போனான். இத்தகைய கவலைகள் அவர்களது உள்ளத்தை உடைத்ததேயன்றி, கிறிஸ்துவுடன் அக்குடும்பம் கொண்டிருந்த உறவு ஒருபோதும் உடைபடவே இல்லை.
இலங்கை மக்களுக்கு மருத்துவமும், சுவிசேஷமும் அதி முக்கியத் தேவை என உணர்ந்த ஜான் ஸ்கடர், இரண்டையும் செய்ய தன் கவனத்தை திசை திருப்பினார். அந்நாட்களில் அச்சுக் கூடம் பற்றாக்குறையாக இருந்ததால் ஓலையில் தன் கையினாலே சுவிசேஷத்தை எழுத ஆரம்பித்தார். வேதாகமத்திலிருந்து ஒரு சில பகுதிகள், நற்செய்தியை அறிவிக்கும் கதைகள் போன்றவற்றை எழுதி விநியோகித்தார். தினமும் காலை 11/2 மணி நேரம் தேவனோடு செலவிட்ட பின்பு, தன் மருத்துவ பணியை தொடங்குவார். மதிய உணவிற்கு முன்பதாக சுமார் 60 நோயாளிகளை சந்தித்து மருத்துவம் பார்த்து முடித்து விடுவார். கிறிஸ்துவுக்காக சேவை செய்ய வேண்டும் என்கிற வைராக்கியம் அவரை அமர்ந்திருக்க விடவில்லை. இலங்கையில் தான் செய்து வரும் பணியை குறித்து, அமெரிக்காவில் வசித்து வரும் தன் பெற்றோருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்துவார். தகப்பனார் ஜோசப் ஸ்கடரோ அக்கடிதங்களை பிரிக்காமலேயே குப்பைத் தொட்டியில் வீசி விடுவார். தாய் மரியா அவற்றை பிரித்து, தன் கணவரின் காதுகளில் கேட்கும் படி வாசிப்பார். என்றாலும் அவரிடம் எந்த மாற்றமும் இல்லை. இது மட்டுமல்லாது, தான் ஊழியம் செய்து வந்த பகுதிகளிலிருந்தும் பலவிதமான எதிர்ப்புகளையும், போராட்டங்களையும் சந்தித்தார். மருத்துவம் மற்றும் இலக்கியப் பணியுடன் சேர்ந்து , பிள்ளைகளுக்கு கல்வியையும் கொடுக்க விரும்பினார். ஜான் ஸ்கடரின் மனைவி ஹரியட் 16 ஆண் குழந்தைகளையும் ,3 பெண் குழந்தைகளையும் பராமரித்து, அவர்களுக்கு பாடங்களையும் கற்றுக் கொடுத்து வந்தார். ஜான் ஸ்கடர் எண்ணற்ற பள்ளிகளையும், கல்வி நிறுவனங்களையும் நிறுவினார். புகழ் பெற்று விளங்கும் பட்டிக்கோட்டா செமினரி அவற்றுள் ஒன்று. தேவன் இக்குடும்பத்திற்கு 7 குமாரர்களையும் 2 குமாரத்திகளையும் ஈவாக கொடுத்து ஆசீர்வதித்தார். தனது ஒன்பது பிள்ளைகளையும் இப்பெற்றோர் மிஷினெரிப் பணிக்கென அர்ப்பணித்தார்கள் . இலங்கையில் பணி செய்து வந்த ஜான் ஸ்கடர் இந்தியாவில் பணி செய்ய அனுப்பப்பட்டார். இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் எவ்வாறு பணிசெய்தார், இவருடைய சந்ததியாரின் பங்கு என்ன என்பதை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம். ஒரு தனி மனிதனுடைய கீழ்படிதல் அவனுடைய சந்ததியை ஆசீர்வாதமாக மாற்றும் என்பதற்கு ஜான் ஸ்கடர் சிறந்த ஒரு எடுத்துக் காட்டு.
அன்பு நண்பர்களே, இன்று நம்முடைய கீழ்படிதல் எப்படி உள்ளது? நம்முடைய கீழ்படியாமை, நிச்சயம் நம் சந்ததியை பாதிக்கும் என்பதை மறந்து போக கூடாது.
... தொடரும்
No one can be
ignorant of the famous Christian Medical College in India today, especially in
Vellore. It can be said that the life of Dr. John Scudder, who founded the
college, impressed us all. He lived and passed away after shining a light in
the lives of the poor, who did not have access to medical facilities, and
creating many doctors. He established rural health centres, purified people's
lives, and gave them the love of Christ. He started nursing training schools
and trained many women, creating many female doctors. Although there are many
reasons why the world admires him, it is no exaggeration to say that his family
is the most important reason, as are his parents and grandparents. Their proper
parenting turned Dr. John Scudder into a towering womaniser the world looked up
to. Serving God was the main goal of their lives. For whatever reason, they did
not give up their love for Christ. This article looks at Dr. John's
grandfather, Dr. John Scudder.
In 1819, Dr. John Scudder, aged 25, set sail with his wife Harriet and daughter Maria. Although the ship's journey was difficult, he preached the gospel to the ship's driver and everyone there. They also accepted Christ and were saved. According to Hebrews 11:8, "By faith Abraham, when he was called to go where he was about to receive his freedom, obeyed and set out, not knowing where he was going." As Abraham departed, so did Dr. John Scudder. When the ship docked at Serampore, Calcutta, John met William Carey, who had worked there. The few moments he had with him encouraged John and motivated him to work harder. One day, his daughter Maria fell ill and died in three days. However, he did not get tired and went ahead. He was immediately transferred to Sri Lanka and started his work there in a district called Japna. Their next daughter also died at birth. Such worries did not break their hearts, and the family's relationship with Christ was never broken.
John Scudder, realising the urgent need for medicine and evangelism for the people of Sri Lanka, turned his attention to doing both. As there was a shortage of printing presses in those days, he started writing the Gospels with his own hand on paper. He wrote and distributed a few passages from the Bible, evangelistic stories, etc. After spending 11/2 hours with God every morning, he starts his medical work. Before lunch, he will see and treat about 60 patients. His zeal to serve Christ did not let him sit still. He used to inform his parents living in America about the work he was doing in Sri Lanka through a letter. Father Joseph Scudaro would throw the letters in the trash without separating them. Mother Maria would separate them and read them aloud in her husband's ears. But there is no change in him. Not only this, he faced various protests from the areas where he was ministering. Along with medical and literary work, he also wanted to educate children. John Scudder's wife, Harriet, took care of and tutored 16 boys and three girls. John Scudder founded numerous schools and educational institutions. The famous Battikotta Seminary is one of them. God blessed this family with seven sons and two daughters. He devoted his nine children to missionary work. John Scudder, who was working in Sri Lanka, was sent to work in India. How he worked in India, especially in Tamil Nadu, and what the role of his descendants was will be seen in the next article. John Scudder is a great example of how one man's obedience can bless his posterity.
Dear friends, how is our obedience today? We must not forget that our disobedience will surely affect our posterity.
... to be
continued
Comments
Post a Comment