மார்த்தாள் மால்ட் Martha Mault
தென் தமிழகம் இன்று அறிவிலும், அரசியலிலும், கல்வியிலும் சிறந்து விளங்குகிறதென்றால், கடல் கடந்து வந்து அங்கு பணியாற்றிய மூத்த முன்னோடி ஊழியர்களே காரணம் என்றால் மிகையாகாது. அதிலும் குறிப்பாக, வீட்டிற்குள்ளேயே பூட்டிக் கிடந்த பெண்கள் இன்று சமுதாயத்தில் உயர்ந்திருப்பதற்கும் இவர்களே காரணம். 19-ஆம் நூற்றாண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தின் மறுமலர்ச்சிக்கு இங்கிலாந்து தேசத்திலிருந்து வந்த சார்லஸ் மால்ட் மற்றும் அவரது மனைவி மார்த்தாள் மால்ட் பல காரியங்களைச் செய்தனர். 1818 - ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணமானது. திருமணமான ஒரு வாரத்திலேயே இருவரும் இந்திய தேசத்திற்கு சுவிசேஷத்தை சுமந்து கொண்டு வந்தனர். கடும் எதிர்ப்புகள் மத்தியிலும் தேவனுடைய பணியை தைரியமாக செய்து வந்தனர். தென் தமிழகத்தின் கால சூழ்நிலை மற்றும் கலாச்சாரம் அவர்களை அதிகம் பாதித்த போதும் கிறிஸ்துவுக்காக அனைத்தையும் சகித்தார்கள்.1821 - ஆம் ஆண்டு, முதல் அச்சுக்கூடத்தை நாகர்கோவிலில் நிறுவினார்கள். மார்த்தாள் மால்ட் பெண்கள் வாழ்வில் பெரிய திருப்புமுனையை கொண்டு வந்தார். பெண்களுக்கான முதல் போர்டிங் பள்ளிக்கூடத்தை நிறுவினார். கல்வியறிவ