Schwartz மாதிரியா? அல்லது ஒருமாதிரியா? REV.SWARTZ Ministry (Tamil & English)
தலைவனின் முக்கிய பணி அநேக புதிய தலைவர்களை உருவாக்குவதே. தேவன் நமக்கு தலைமைத்துவத்தை அளிப்பது இரும்பு போல் பிடித்து ஆளுகை செய்ய அல்ல; மக்களுக்கு உதவியாக இருந்து அவர்களை சிறந்தவர்களாக உருவாக்கவே ஆகும். வேதத்தில் குறிப்பிட்டுள்ள தலைவர்கள், தேவன் தங்களுக்கு அளித்த தலைமைத்துவ பொறுப்பை சிறப்பாக செய்து முடித்தார்கள். அதன் விளைவாக அனேகதலைவர்கள் எழும்பினார்கள். பவுலை தொடர்ந்த தீமோத்தேயு, தீமோத்தேயு மூலம் உருவாக்கப்பட்ட தீத்து என தலைவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறதை நாம் பார்க்கலாம். நமக்கு முன்பாக வாழ்ந்து சென்ற முன்னோடி மிஷனெரிகளும் தங்கள் தலைமைத்துவ பொறுப்பை உண்மையோடும் உத்தமத்தோடும் நிறைவேற்றி சென்றனர். அவர்களின் பதவி, பணம், அதிகாரம் என அனைத்தையும் தியாகம் செய்து முன்மாதிரியான வாழ்வு வாழ்ந்தார்கள். அது மட்டுமல்லாது அநேகரை தலைவர்களாக உருவாக்கி அவர்களும் தேவ பணியை தொடர உற்சாகப்படுத்தினார்கள். சிறந்த தலைமைத்துவத்திற்கு உதாரணமாக “திருநெல்வேலியின் தந்தை” என்றழைக்கப்படும் சுவார்ட்ஸ் ஐயர் அவர்கள் விளங்கினார்கள். 1776 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் எட்டாம் தேதி சோனன் பர்க் என்