மிஷனரிப் பணி என்றவுடன் நம் நினைவிற்கு வருவது எல்லாம் காடு மலைகளில் ஊழியம் செய்வது மட்டுமே. இன்னும் சிலருக்கு காட்டுமிராண்டிகள் மத்தியில் ஊழியம் செய்வது என்பது நினைவிற்கு வரும். இது ஒருவகையில் உண்மைதான் என்றாலும் இருந்த இடத்திலிருந்தே மிஷனெரி பணியை நம்மால் செய்ய முடியுமா? முடியும் என்று ஆனி ஆர்ம்ஸ்ட்ராங் வாழ்ந்து காட்டியுள்ளார்.
இவர் அன்னை தெரசாவை போல ஏழை மக்களை அரவணைத்து ஆதரித்தவர் இல்லை; பிளாரன்ஸ் நைட்டிங்கேல் போன்று நோயுற்றவர்களை கவனிக்கும் தாதியும் அல்ல; ஆனால் ஆண்டவர் தனக்கு கொடுத்த எழுத்துத் திறமையை கொண்டு மிஷனெரி பணிகளை தாங்கினார். தேவன் தன்னை கொண்டு செய்யப் போகும் மாபெரும் திட்டத்தை மனதில் கொண்டு திறம்பட செயலாற்றினார்.
தன் முழு இருதயத்துடன் இயேசுவை நேசித்த இவர் மிஷனெரிகளுக்கு உதவிட வேண்டும் என்ற வார்த்தையினால் கடிதங்கள் எழுதுவதின் மூலம் தன் பணியை ஆரம்பித்தார். விரல்கள் அத்தனையும் மூலதனங்கள் ஆயின. அவைகளே தேவ ஊழியர்கள் மீது கொண்டுள்ள பாசத்தை வெளிப்படுத்தும் சிறந்த கருவிகள் ஆயின.
தட்டச்சு மூலமாகவும் தன் கை படவும் மிஷனெரிகளின் பணிகளை குறித்ததான ஏராளமான கடிதங்களை தன் நண்பர்களுக்கு எழுதி அனுப்பினார். அவைகளில் மிஷனெரி ஊழியததின் தேவைகள், எப்படி பணியாற்ற வேண்டும் என்ற முறைகளை குறித்தும் அவற்றிற்கு எப்படி எல்லாம் உதவ முடியும் என்பது குறித்தும் திட்டமும் தெளிவுமாக எழுதினார். அவருடைய கடிதங்கள் மிகவும் நீண்டவைகளாயும் ஊக்குவிப்பதாகவும் இருந்தன.
1893ம் ஆண்டு மட்டும் இவர் எழுதிய கடிதங்களின் எண்ணிக்கை 17, 719 ஆகும். மிஷனெரி பணியில் இவருக்கிருந்த ஆர்வத்தைக் கண்ட மக்கள் பலர் தங்களால் இயன்ற அளவிற்கு மிஷனெரி பணிக்காக கொடுத்தும் தாங்கியும் ஆதரித்தனர்.
இன்றும் உங்கள் திறமைகள் எதுவாயினும் அதை தேவ பணிக்கென பயன்படுத்துங்கள். அதன் மூலம் அநேக தேவ ராஜ்யத்தில் இணைய உதவிடுங்கள்.
When we think of
missionary work, all we think of is working in the forested hills. Still others
remember ministering among savages. This is true in a way, but can we do
missionary work from where we are? Anne Armstrong has lived and shown that it
can be done.
She was not a
person who embraced and supported the poor like Mother Teresa; neither is
Florence a nightingale-like nurse who cares for the sick. But she endured
missionary work with the writing skills the Lord had given her. She worked
effectively with God's great plan in mind.
Loving Jesus
with all her heart, she began herwork by writing letters to the missionaries
with the word that she would help them. All the fingers became capitals. They
were the best tools to express affection for God's servants.
She wrote and
sent many letters to her friends about the work of the missionaries, both by
hand and by type. In them, she clearly wrote about the needs of missionary
work, the methods of working, and how everything could help them. Herletters
were very long and encouraging. The number of letters she wrote in 1893 alone
is 17,719. Seeing her interest in missionary work, many people gave and
supported her as much as they could. Whatever talents you have today, use them
for God's work. Through it, help us to enter many kingdoms of God.
மிகவும் அருமை
ReplyDeletePraise God
DeleteThis comment has been removed by the author.
Delete🙏
Delete