Dr.John Scudder (Part II) (Tamil & English)
1836 ம் ஆண்டு சென்னை பட்டணத்தில் தன் குடும்பத்தோடு ஜான் ஸ்கடர் கால் பதித்தார் அச்சுக்கூடத்தை சென்னையில் நிறுவி அதன் மூலம் சுவிசேஷ கைப்பிரதிகள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட வேண்டும் என்று ஆவல் கொண்டார். சென்னை கிறிஸ்தவ கல்லூரியை நிறுவிய டாக்டர் ஆண்டர்சன் அவரோடு ஜான் ஸ்கடருக்கு நெருங்கிய தொடர்பு கிடைத்தது. அவருடைய ஊழியம் ஜானை அதிகம் கவர்ந்தது. குறிப்பாக, கைப்பிரதி ஊழியத்தை அர்ப்பணத்தோடு செய்து வந்தார். காலரா மற்றும் மஞ்சள் காமாலையால் வேலூர் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்ட போது டாக்டர் ஜான் ஸ்கடர் தன்னால் இயன்றவரை அவர்களுக்கு மருத்துவ உதவி செய்து பலரது உயிர்களை காப்பாற்றினார். அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வந்த முதல் மருத்துவ மிஷினெரி என்ற பெருமை டாக்டர் ஜான் ஸ்கடரையே சாரும். ஆசியா கண்டத்திலேயே முதல் Western Medical Missionயை இலங்கையில் ஸ்தாபித்த வரும் இவரே. சுமார்36 வருடங்கள் இந்தியாவிலே தன் பணிகளைச் செய்தார். குறிப்பாக சென்னை, வேலார், உதகை, ஆர்காட் போன்ற பகுதிகளில் தன்னுடைய மருத்துவ பணியுடன், சுவிசேஷ பணியையும் செய்து வந்தார். தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு ஆகிய மொழிகளில் மருத்துவம் ...