Rev. Thomas Gajetan Ragland இராக்லாந்து (Tamil & English)
அக்டோபர் 22 ஆம் தேதி காலையில் விடியும் வேளை வந்து விட்டது என்று எண்ணி மூன்று மணிக்கே மிஷனெரி இராக்லாந்து படுக்கையை விட்டு எழுந்து விட்டார். நிலா வெளிச்சத்தை கிழக்கு வெறுப்பு என்று நினைத்தார். முந்தின இரவே பாளையங்கோட்டைக்கு அனுப்பவேண்டிய கடிதங்களை எழுதி முடித்திருந்ததால் கடிதங்களை பாளையங்கோட்டைக்கு கொண்டு போகும் நபரை எழுப்பி அக்கடிதங்களையும், சென்னைக்கு தபாலில் சேர்க்க வேண்டிய கடிதங்களையும் கொடுத்து அம்மனிதனை அனுப்பிவிட்டார். அதன் பின்னரே நேரத்திற்கு முன் தான் விழித்துக்கொண்டதை உணர்ந்தார். உடன் ஊழியர் ப்வெனும் விழித்துக்கொண்டார். அவர் இராக்லாந்திடம் "நேரம் இருக்கிறது, சற்று படுத்து உறங்குங்கள்" என்று கூற, "இல்லை, தூக்கம் போய்விட்டது" என்று கூறி தனது வேதாகமத்தை எடுத்து வாசித்து, தியானித்து, ஜெபிக்க உட்கார்ந்தார். ஒரு மணி நேரம் அதில் செலவிட்ட பின் அதிகாலை நேரம் ஆகிவிட்டதை அறிந்து வெளியே சென்று உலாவப் புறப் பட்டார். காலை ஆகாரம் அருந்திய பின் அவரும் ப்வெனும் அந்த வார வரவு செலவு கணக்குகளை தயாரிக்க உட்கார்ந்தனர். உடனே ராக்லாந்து நாம் இருவரும் இ