Posts

Showing posts with the label foremost missionary revivalist in early 20th-century China

Jonathan Goforth (ஜோனத்தான் கோபோர்த்) (Tamil & English)

Image
கனடாத்தில் பிறந்து வளர்ந்த ஜோனத்தான் கோபோர்த், 20ம் நூற்றாண்டில் சீனா தேசத்தில் ஏற்பட்ட எழுப்புதலுக்கு முக்கியமானவராகக் கருதப்பட்டார். 1859ம் ஆண்டு பிப்ரவரி 10ம் நாள், பிறந்த இவர், ஐந்து வயதாக இருக்கும் போதே சங்கீதங்களை பிழையின்றி வாசிப்பார். வேத வசனங்களை வாசித்து மனப்பாடம் செய்து, அவற்றை யாரிடமாவது கூற ஆசைப்படுவார். சிறுவயதிலேயே கோபோர்த் ஆண்டவரை அதிகம் தேடினார். அர்ப்பணிக்கப்பட்ட கிறிஸ்தவனாக வாழ்ந்து வந்தார். தன்னுடைய பள்ளி சுவற்றில் தொங்கின உலக வரைபடத்தின் முன் மணிக்கனக்காக நின்று, பரந்து விரிந்த மக்கள் என்று இயேசுவை அறிவார்கள்? என்ற பெருமூச்சோடு பார்ப்பார். ஆத்துமாக்களை குறித்த பாரம் அவரை அதிகம் அழுத்தியது. பாடுகளும், இழப்புகளும் அவரது வாழ்வை சுற்றி சுற்றி வந்த போதிலும், தேவ ஆளுகைக்குள் இருந்த கோபோர்த், விசுவாசத்தை விட்டு ஒரு போதும் பின்வாங்கவில்லை. ஹட்சன் டெய்லர் எழுதிய புத்தகத்தை படித்த போது, கோபோர்த் சீனாவில் மிஷனெரி ஊழியத்தின் அவசியத்தை புரிந்து கொண்டார். சீனாவிற்கு சென்று மிஷனெரியாக பணியாற்ற வேண்டுமெனவும் பாரம் கொண்டார். அது மட்டுமல்லாது அப்புத்தகத்தை அநேக ஊழியர்கள...