John Wesley Quotes : Twelve powerful sayings... ஜான் வெஸ்லி நியமித்த 12 ஒழுங்குகள் (Tamil & English)



 

இங்கிலாந்தை அசைத்த தேவ மனிதர் ஜான் வெஸ்லி அவர்கள் கிறிஸ்தவர்களுக்கென்று நியமித்த 12 ஒழுங்குகள்

1. ஊக்கமும் சுறுசுறுப்பும் உள்ளவனாய் இரு. ஒருபோதும் சும்மா இராதே. உன் கரங்கள் எப்பொழுதும் ஏதாவது ஒரு பயனுள்ள வேலையில் ஈடுபட்டு இருக்கட்டும். காலத்தை வீணாக்காதே. தேவையான இடத்தில் அவசியமான அளவு நேரத்தை விட எவ்விதத்திலும் கூடுதலான நேரத்தை செலவிடாதே.
2. மிகவும் விழிப்புள்ளவனாயிரு. கர்த்தருக்குப் பரிசுத்தம் என்பதே உன் வாழ்வின் சட்டவாக்கியமாய்  இருக்கட்டும்.  எல்லா  வெதுவெதுப்பையும்,  கேலிப் பேச்சுக்களையும்,  முட்டாள்தனமான பேச்சையும் உன்னைவிட்டு அகற்று.
3. பெண்களுடன் உரையாடுகையில் உன் உரையாடல் மிகவும் சுருக்கமாகவும் குறுகிய நேரம் உடையதாகவும் இருக்கட்டும். முக்கியமாக இளம்பெண்களுடன் நீ சம்பாஷிக்கையில்  மிகவும் ஞானத்தோடு நடந்துகொள்.
4. கிறிஸ்துவுக்குள் உன்னைவிட அனுபவமுள்ள சகோதரர்களிடம் ஆலோசனை கேட்காமல் உன் திருமண காரியத்தில் எந்த முடிவும் எடுத்து விடாதே.
5.உன் சொந்த கண்கள் காணாதிருக்க,  யாரைக் குறித்தும் பேசப்படும் தீமையானவற்றை ஒருபோதும் நம்பாதே. எல்லாவற்றையும் அடிப்படையிலிருந்து சோதித்துப் பார். 
6.எந்த மனிதனை குறித்தும் தீமையானதை  பேசாதே. உன் வார்த்தைகள் கேன்சரை போல அழித்துவிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள். சம்பந்தப்பட்ட நபரை சந்திக்கும் வரை உன் எண்ணங்களை உனக்குள்ளாகவே  அடக்கி வைத்துக் கொள்.
7. யாரிடமாவது தவறைக் கண்டால் உடனடியாக நேருக்கு நேர் சுட்டிக்காட்டு. உன் மனதிலிருந்து பகை என்னும் நெருப்பை மிக சீக்கிரம் எடுத்துப் போடு. 
8. பாவத்தைத் தவிர வேறு எதற்கும் வெட்கப்படாதே.
9.அழியும்  ஆத்துமாக்களை காப்பதே உன் தலையாய கடமை. எனவே இதற்காக நீ செலவு செய்வதுடன்,  செலவு செய்யப்படவும்  ஆயத்தமாய் இரு.
10. எல்லாவற்றையும் குறிப்பிட்ட நேரத்தில் செய். எல்லாவற்றிலும் ஒழுங்கைக் கடைபிடி.
11. எல்லா காரியத்தையும் தேவ சித்தத்தின்படி செய்.
12.பல தடவைகள் பிரசங்கிப்பது மட்டும் உன் கடமை அல்ல, எத்தனை ஆத்துமாக்களை மீட்க முடியுமோ அத்தனை பேரையும் மீட்டு அவர்களை மனந்திரும்புதலுக்கு  நேராக வழிநடத்தி,  உன் முழுப் பலத்தோடும் அவர்களை பரிசுத்தத்தில் ஊன்ற கட்டு. ஏனெனில் பரிசுத்தமில்லாமல் ஒருவனும் தேவனை தரிசிக்க முடியாதே.
ஜான் வெஸ்லி நியமித்த 12 ஒழுங்குகளை நாமும் கடைபிடிப்போம்


John Wesley, the man of God who shook England, prescribed 12 orders for Christians. 

1. Be motivated and energetic. Never be idle. May your hands always be engaged in some useful work. Don't waste time. Do not spend more time than necessary in any place.

2. Be very aware. Let holiness to the Lord be the law of your life. Put away from you all lukewarmness, mockery, and foolish talk. 

3. Keep your conversation very brief and short while talking to women. Be very wise in your dealings, especially with young women. 

4. Don't make any decisions about your marriage without consulting your brothers who are more experienced than you in Christ. 

5.Never believe evil things spoken of anyone, lest thine own eyes see. Test everything from scratch. 

6. Do not speak ill of any person. Remember that your words can kill like cancer. Keep your thoughts to yourself until you meet the person concerned. 

7. If you find fault with someone, point it out immediately. Take away the fire of enmity from your mind very quickly. 

8. Be not ashamed of anything but sin. 

9. Your main duty is to save perishing souls. So be prepared to spend and be spent for this. 

10. Do everything on time. Keep order in everything. 

11. Do everything according to God's will.

12. It is not only your duty to preach many times, but to save as many souls as you can, lead them straight to repentance, and plant them in holiness with all your might. Because no one can visit God without holiness. We also follow the 12 precepts prescribed by John Wesley.

  

Comments

Popular posts from this blog

வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)

பக்த்சிங் Bakht Singh

குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!