Dr.John Scudder (Part II) (Tamil & English)


1836 ம் ஆண்டு சென்னை பட்டணத்தில் தன் குடும்பத்தோடு ஜான் ஸ்கடர் கால் பதித்தார் அச்சுக்கூடத்தை சென்னையில் நிறுவி அதன் மூலம் சுவிசேஷ கைப்பிரதிகள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட வேண்டும் என்று ஆவல் கொண்டார். சென்னை கிறிஸ்தவ கல்லூரியை நிறுவிய டாக்டர் ஆண்டர்சன் அவரோடு ஜான் ஸ்கடருக்கு நெருங்கிய தொடர்பு கிடைத்தது. அவருடைய ஊழியம் ஜானை அதிகம் கவர்ந்தது. குறிப்பாக, கைப்பிரதி ஊழியத்தை அர்ப்பணத்தோடு செய்து வந்தார். காலரா மற்றும் மஞ்சள் காமாலையால் வேலூர் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்ட போது டாக்டர் ஜான் ஸ்கடர் தன்னால் இயன்றவரை அவர்களுக்கு மருத்துவ உதவி செய்து பலரது உயிர்களை காப்பாற்றினார். அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வந்த முதல் மருத்துவ மிஷினெரி என்ற பெருமை டாக்டர் ஜான் ஸ்கடரையே சாரும். ஆசியா கண்டத்திலேயே முதல்  Western Medical Missionயை இலங்கையில் ஸ்தாபித்த வரும் இவரே. சுமார்36 வருடங்கள் இந்தியாவிலே தன் பணிகளைச் செய்தார். குறிப்பாக சென்னை, வேலார், உதகை, ஆர்காட் போன்ற பகுதிகளில் தன்னுடைய மருத்துவ பணியுடன், சுவிசேஷ பணியையும் செய்து வந்தார். தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு ஆகிய மொழிகளில் மருத்துவம் சார்ந்த குறிப்புகளையும், சுவிசேஷத்தையும் அச்சிட்டு விநியோகித்தார். இந்தியாவில் துண்டுப் பிரதி மூலம் சுவிசேஷத்தை அறிவிப்பதில் ஜான் ஸ்கடரை யாராலும் மிஞ்ச முடியவில்லை. தமிழகத்தின் கொளுத்தும் வெயிலில் தொடர்ந்து பதினொரு மணி நேரங்கள் கூட நின்று கொண்டு துண்டு பிரதியை விநியோகித்துள்ளார்.

டாக்டர் ஜான் ஸ்கடர்  தன்னுடைய குழந்தைகளை மட்டுமின்றி , மருத்துவம் கற்க ஆவலுடைய எண்ணற்ற வாலிபர்களுக்கும் கூட மருத்துவ பயிற்சியளித்தார். இவரது பணியின் மூலம் அநேக மருத்துவச்சிகள் மற்றும் இளம் மருத்துவர்கள் உருவானார்கள்.  இந்தியாவின் கால சூழ்நிலை அவருக்கு ஒத்துக் கொள்ளாததால் அடிக்கடி சுகவீனமானார். தேவன் அவரோடிருந்து அவரை பாதுகாத்தர்  கிறிஸ்துவுக்காக வேதனையை அனுபவித்தவர்களை அவர் ஒரு போதும் கைவிட மாட்டார். 

டாக்டர் ஜான் ஸ்கடர் திருச்சபைகளில் காணப்பட்ட ஜாதி வேறுபாட்டை களைய அதிகம் பாடுபட்டார். அவருடைய முயற்சியின் பலனாக சென்னை மிஷினெரிகளின் கருத்தரங்கில் ஜாதி வேறுபாட்டை களைய உறுதி பூண்டனர். இது இந்திய சரித்திரத்தில் முக்கியமானதாக கருதப்படுகிறது. மேலும் ஜான் ஏழை பணக்காரன் என எந்தவித பாரபட்சமுமின்றி அனைத்து மக்களுக்கும் சுவிசேஷத்தை கூறினார். ஒரு முறை புதுக்கோட்டை மன்னரால் ஜான் ஸ்கடர் அரண்மனைக்கு அழைக்கப்பட்டார். அங்கு நடை பெற்ற நிகழ்வில் பங்கு பெற்ற பின்னர், மன்னருக்கும் அங்குள்ள அமைச்சர்களுக்கும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை பிரசிங்கித்தார். மிஷினெரிப் பணியைக் குறித்ததான அநேக தகவல்களை எழுதி, அமெரிக்கா மற்றும் இங்கிலாத்திற்கு அனுப்பி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.


இச்சமயத்தில் ஜான் ஸ்கடரின் மகன் ஹென்றி ஸ்கடர் சென்னை மருத்துவ பட்டம் பெற்று, தன் தகப்பனாரோடு  இணைந்து பணியாற்றினார். இருவரது  சேவையால், இந்திய மருத்துவத்துறையில் பெரும் வளர்ச்சியை கண்டது. இதனை ஏற்றுகொள்ள இயலாத  பண்டைய கால வைத்தியர்கள், இவர்கள் பேரில்  மந்திரங்கள் செய்தனர். யாக்கோபிற்கு விரோதமாக எந்தவித மந்திரமும் இல்லை என்ற வசனத்தின் படி, தேவன் இவர்களை எல்லாவித வல்லமைகளுக்கும் விலக்கி பாதுகாத்தார். 1854ம்  ஆண்டு ஜானின் மனைவி ஹரியட்  தீராத காய்ச்சலினால் தேவ இராஜ்யத்தில் பிரவேசித்தர்கள். மரிக்கும் போது, “மகிமையான பரலோகம்! மகிமையான  இராஜ்யம்!” என கூறிக் கொண்டே எந்தவித பதட்டமும் இன்றி மரித்தார்கள். எத்தனை பெரிய பாக்கியம்! 

டாக்டர் ஜான் ஸ்கடர் வேலூரிரைப்பற்றி உயர்ந்த தரிசனம் கொண்டிருந்தார். அத்தரிசனத்தை நிறைவேற்ற அவருடைய சந்ததிகள் எழும்பினார்கள்.  அவர்களையும் தென்இந்தியாவில் பணி செய்ய உற்சாகப்படுத்தினார். இவர் குடும்பத்திலிருந்து  43 நபர்கள்  (நான்கு தலை முறையினர்) கிறிஸ்துவின் பணிக்காக அர்ப்பணித்து இந்தியாவில் பணி செய்தனர்.  இவர்களது வாழ்வில் சுமார் 1074 வருடங்கள் இந்தியாவில் சேவைப் பணிகள் சிறப்பாக இன்று வரை தொடர்கின்றது. ஜான் ஸ்கடரின் பேத்தி தான் டாக்டர் ஜடா ஸ்கடர். இவர் மூலம் சி.எம்.சி மருத்துவமனை வேலூரில் உருவாக்கப்பட்டதை நாம் நன்கு அறிவோம்.  சிஎம்சி மருத்துவமனை, ராணிப்பேட்டையில் ஸ்கடர் ஞாபகார்த்த மருத்துவமனை, வாலாஜாவில் மருத்துவமனை, ஆர்காட்  மிஷன்,  ஆர்காட் செமினரி, ஆரணி தொழிற்பயிற்சி பள்ளி, திண்டிவனம் மேல்நிலைப்பள்ளி போன்றவையும், அநேக மொழிகளில் இலக்கியப் பணிகளையும் இவர்கள்  செய்தனர்.  இந்தியாவில் டாக்டர் ஜான் ஸ்கடர் 36 ஆண்டுகள் பணிபுரிந்து தேவ ராஜ்யத்தை அடைந்தார். ஆனால் அவர் ஆரம்பித்த பணிகள் பல நூற்றாண்டுகளை கடந்து இன்று வரை செயல்பட்டு வருகிறது. 

 தேவராஜிய  பணியில் நம்முடைய பங்கு என்ன? நம் சந்ததியின் பொறுப்புதான் என்ன?  சற்று யோசித்துப் பார்ப்போம். 

- தொடரும் 


John Scudder set foot in Chennai with his family in 1836 and set up a printing press there to print and distribute gospel manuscripts. John Scudder had a close association with Dr. Anderson, who founded Madras Christian College. John was greatly impressed by his ministry. In particular, he devoted himself to the manuscript ministry. Dr. John Scudder helped the people of Vellore to the best of his ability and saved many lives when the people of Vellore suffered greatly from cholera and jaundice. Dr. John Scudder is credited with being the first medical missionary from America to India. He is the one who established the first Western medical mission in Asia in Sri Lanka. He worked in India for about 36 years. Along with his medical work, he also did evangelistic work in areas like Chennai, Velar, Udagai, and Arcot. He printed and distributed medical notes and gospels in Tamil, Sanskrit, and Telugu. No one could surpass John Scudder in preaching the gospel through pamphleteering in India. He has distributed pamphlets by standing continuously for eleven hours in the scorching sun of Tamil Nadu.

 Dr. John Scudder trained not only his own children but also countless young people who were eager to study medicine. Many midwives and young doctors were formed through her work. The conditions in India did not suit him, and he often fell ill. God kept him from himself, and he will never forsake those who have suffered for Christ. Dr. John Scudder worked hard to eliminate caste discrimination in the churches. As a result of his efforts, the Madras Missionaries'

Conference took a pledge to eradicate caste discrimination. It is considered important in Indian history. And John preached the gospel to all people without any discrimination between the rich and the poor. Once, John Scudder was invited to the palace by the King of Pudukottai. After participating in the event, he preached the gospel of Christ to the king and the ministers there. He wrote a lot of information about the missionary work and sent it to America and England to create awareness among people.

Meanwhile, John Scudder's son, Henry Scudder, obtained his medical degree in Madras and worked with his father. Due to the services of both of them, the Indian medical industry saw great growth. The ancient doctors, who could not accept this, performed mantras on them. According to the verse that says there is no magic against Jacob, God protected them from all kinds of power. In 1854, John's wife, Harriet, entered the kingdom of God due to an incurable fever. When dying, “Glorious heaven! Glorious Kingdom!” Saying that, they died without any anxiety. What a blessing!

 Dr. John Scudder had a lofty vision of Vellore. His descendants arose to fulfil the vision. He also encouraged them to work in South India. 43 people (four generations) from his family devoted themselves to the work of Christ and worked in India. For about 1074 years of their lives, service work in India continues to this day. Dr. Jada Scudder is the granddaughter of John Scudder. We know very well that CMC Hospital was established in Vellore by her. CMC Hospital, Scudder Memorial Hospital in Ranipettai, Wallajaville Hospital, Arcot Mission, Arcot Seminary, Arani Vocational School, Tindivanam High School, etc. They also did literary work in many languages. Dr. John Scudder worked in India for 36 years and attained the Kingdom of God. But the work he started has passed through the centuries and is still working today.

What is our role in the theocratic mission? What is the responsibility of our posterity? Let's think about it.

to be continued

 


Comments

Popular posts from this blog

வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)

பக்த்சிங் Bakht Singh

குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!