Donald Andenson McGavran டொனால்ட் மெக்காவரன்
மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள் உண்டு. அவைகள் நிறைவேற சிலர் கடினமாக உழைக்கிறார்கள். சிலர் கனவுகள் கண்டே தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். சுவிசேஷகர் டொனால்ட் ஆண்டர்சன் மெக்காவரன் அவருக்கு வித்யாசமான ஆசை இருந்தது. வட இந்தியாவில் கூட்ட நெரிசலாக இருக்கும் பாசஞ்சர் ரயிலில் ஒரு நாள் பயணம் செய்ய வேண்டும். அப்போது இதய நோயால் பாதிக்கப்பட்டு மரிக்க வேண்டும். அவ்வழியில் உள்ள கிராமத்திலேயே தன் உடலும் அடக்கம் செய்யப்பட வேண்டும். இதுதான் அவரது ஆசை. வித்தியாசமாக இருக்கிறதல்லவா? தொடர்ந்து வாசியுங்கள். டொனால்ட் மெக்காவரன் மூன்றாம் தலைமுறை கிறிஸ்தவ மிஷனெரியாக வாழ்ந்தவர். 1897 - ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தாமோ என்ற ஊரில் மிஷனெரி பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார். இவரது பெற்றோர் ஜான் மெகாவரன் - ஹெலன் அமெரிக்கா தேசத்திலிருந்து இந்தியாவிற்கு மிஷனெரிகளாக வந்தவர்கள். இந்தியாவில் ஆரம்ப கல்வியைக் கற்ற மெக்காவரன், தன் மேற்படிப்புகளை அமெரிக்காவில் பயின்றார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று சிறந்து விளங்கியதோடு, தன்