Posts

Showing posts with the label best remembered as the author of the Christian allegory The Pilgrim's Progress.

ஜான் பனியன் John Bunyan (Tamil & English)

Image
   இங்கிலாந்திலுள்ள பெட்போர்டு என்ற இடத்தில் ஜான்   பனியன் 1628 ம் ஆண்டு நவம்பர் மாதம் பிறந்தார் . இவரது பெற்றோர்கள் கிறிஸ்தவர்கள் அல்லர் . சிறுவயதில் தனது மூதாதையரின் தொழிலான பாத்திரங்களை பழுது பார்த்து விற்பனை செய்யும் தொழிலையே இவரும் தனது தந்தையுடன் சேர்ந்து செய்து வந்தார் . ஏழைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால் உயர் கல்வி பெற இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை . வீட்டின் பொருளாதார  தேவையைச் சந்திக்க பள்ளிப் படிப்பை இடையிலேயே விட வேண்டியிருந்தது . தனது இளம்பிராயத்தில் ஒரு தீய மனிதனாகவே வளர்ந்தார் . பொய் சொல்லவும் , மற்றவர்களை ஏமாற்றவும் , பெரியவர்களை மதிக்காமலும் இருந்தார் . வாழ்க்கையில் நிம்மதியில்லாமல் போகவே தனது 16 வது வயதிலேயே இராணுவத்தில் சேர்ந்தார் . இரண்டாண்டுகள் மட்டும் இராணுவத்தில் பணியாற்றி திரும்பிய இவர் தனது 19 வது வயதில் ஒரு விசுவாசியான கிறிஸ்தவப் பெண்னை திருமணம் செய்தார் . அவள் அடிக்கடி கிறிஸ்துவைப் பற்றி ஜானிடம் பேசுவா ர் . அவரைப் பிரியப்படுத்த ஜான் ஆலயத்திற்குப் போகவும...