Posts

Showing posts with the label freedom and education during the late 19th and early 20th centuries

பண்டிதர் ராமாபாய், Pandit Ramabai (Tamil & English)

Image
வைதீக இந்துவான ஆனந்த் சாஸ்திரி தான தர்ம செயல்கள் செய்வதை தமது கடமையாக எண்ணி ஏராளமாக செலவு செய்து வந்தார். நாளடைவில் தனது சொத்தை முழுவதுமாக இழந்துவிட்டார். இருந்தாலும் பக்தி நிறைந்த அவர், புண்ணிய ஸ்தலங்கள் தோறும் சென்று நீராடியும், கோயில்களுக்கு சென்று தெய்வங்களை தரிசித்தும் தன் நேரங்களை செலவு செய்து வந்தார். சமஸ்கிருதம் கற்றறிந்த இவர், வேத நூல்களை மற்றவர்களுக்கு போதித்தும் வந்தார்.  அந்நாட்களில் தேசத்தில் கொடிய பஞ்சம் உண்டாயிற்று.அப்பொழுது அவர்கள் வசித்த சென்னை பட்டணமும் அதிக பாதிப்புக்கு உள்ளானது. எங்கு பார்த்தாலும் மக்கள் பசியோடு இருப்பதை காண முடிந்தது. ஆனந்த் சாஸ்திரியின் குடும்பமும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆகாரத்திற்காக அங்குமிங்கும் அலைந்து திரிந்தனர். அவர்களுடைய மத கட்டுப்பாட்டின்படி இழிவான யாதொரு வேலையையும் அவர்கள் செய்யக்கூடாது. தாழ்ந்த வேலைகளை செய்யக்கூடாதபடி பெருமை உள்ளவர்களாய் இருந்தார்கள். ஏனென்றால், உலகப் பிரகாரமான கல்வியை பெற்றிருப்பதால் எவ்வகையிலும் சம்பாதித்திருப்பார்கள். ஆகவே மற்றவர்களிடம் உதவி கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்பது அவர்களின் கருத்து. எனவே ஆனந்த் சாஸ்திரியின