Samuel Kaboo Morris (Tamil & English)
இருண்ட கண்டம் என்று அழைக்கப்பட்ட ஆப்பிரிக்கா தேசத்திற்குள் ஊழியர்கள் பலர் சுவிசேஷத்தை சொல்ல சென்றிருப்பதை நாம் கேள்விபட்டிருக்கிறோம் . ஆனால் இங்கிருந்து ஆண்டவரை ஏற்றுக் கொண்ட ஒரு மனிதன் , ஆண்டவரை பற்றி மற்றவர்களுக்கு அறிவிக்க வந்தார் . அவர் பெயர் காபு . தென் ஆப்பிரிக்காவில் 2 விதமான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வந்தனர் . அதில் குரு இன மக்களுக்கு காபுவின் தகப்பனார் தலைவனாக இருந்தார் . தந்தைக்கு பின் காபு தான் குரு பழங்குடியின மக்களின் அடுத்த தலைவன் என்பது மக்களின் விருப்பம் . இரண்டு பழங்குடியின மக்களிடையே ஏற்படும் சண்டையில் , தோற்பவர்களின் பணம் , பொருள் மற்றும் தலைவனின் மகன் என அனைத்தையும் வெற்றி பெற்றவர்கள் எடுத்துக் கொள்வார்கள் . இவ்வாறு ஏற்பட்ட சண்டையில் குரு இன மக்கள் மூன்று முறை தோற்றுப் போனார்கள் . அப்போது காபுவையும் , அவர்களின் பொருட்கள் எல்லாவற்றையும் சிறைப்படுத்தி கொண்டு சென்றார்கள் ;. காபு அங்கே அதிகமாக சித்திரவதை செய்யப்பட்டான் . காபுவை மீட்க குரு இன மக்கள் மிகவும் போராடினார்கள் . ஆனால் அவனை அடிமையாக கொண்டு சென்ற மக்களோ அவனை கொன்று விட முயற்சி செய்தார்கள் . அந்நாட்களில் , மு...