Eliza Caldwell எலைசா கால்டுவெல்(கால்டுவெல் மனைவி) In Tamil & English
எலைசா மால்ட், நாகர்கோவிலில் முதல் L.M.S. மிஷினெரியாக பணியாற்றி வந்த சார்லஸ் மால்ட் ஐயர் மற்றும் மார்தா மால்ட் அம்மையாருக்கு 1822 ஆம் ஆண்டு மூத்த மகளாக திருவிதாங்கூரில் பிறந்தார். இங்கிலாந்தின் பூர்வீக குடும்பங்களை சேர்ந்த இவரது பெற்றோர், தேவனின் தெளிவான அழைப்பிற்கு இணங்கி, இந்தியாவில் குறிப்பாக நாகர்கோவிலில் கால்பதித்தனர். அச்சமயம் எலைசா பிறந்ததால் மிஷனெரி பயிற்சியுடன் சேர்ந்து தமிழ் மொழி பயிற்சியும் அவர் பெற்றோரிடமிருந்து கிடைக்கப் பெற்றார். நாகர்கோவிலில் தன் தந்தையார் மால்ட் ஐயர் நடத்திய அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்ட தமிழ் நூல்களை பிழைதிருத்தும் பணி செய்து வந்தார். எலைசாவின் தாயார் திருமதி. மால்ட் அம்மா அவர்கள் நாகர்கோவிலில் பெண்கள் தங்கியிருந்து உணவருந்திக் கற்கும் பெண்கள் போர்டிங் பள்ளியொன்றை துவங்கினார்கள். அப்பள்ளியே தென்னிந்தியாவில் பெண்களுக்காக துவங்கப்பட்ட முதல் போர்டிங் பள்ளியாகும். மேலும் தையற்கலை கற்பிப்பதற்கு ரேந்ரா தையல் பள்ளியை தொடங்கினார். நாகர்கோவிலில் கிறிஸ்தவப் பெண்களுக்கு வருவாய் தரும் குடிசைத் தொழிலை கற்றுத்தந்த பெருமை மால்ட் அம்மையாரையே சாரும். தாய் செய்த பணி