Posts

Showing posts with the label Trichy

இசபெல்லா வயட் (பேராயர் கால்டுவெல்லின் மகள்) Isabella Wyatt (daughter of Archbishop Caldwell) (Tamil & English)

Image
இடையன்குடியில் பணியாற்றி வந்த பேராயர் கால்டுவெல் - எலைசா மால்ட் தம்பதியினருக்கு தேவன் ஐந்து ஆண் பிள்ளைகளும், இரண்டு பெண் பிள்ளைகளுமாக ஏழு பிள்ளைகளை கொடுத்து ஆசீர்வதித்தார். ஏழு பிள்ளைகளும் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவ கிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைய தேவன் உதவி செய்தார். பெற்றோர் பிள்ளைகளின் ஆவிக்குரிய வாழ்விற்கு மிகவும் உறுதுணையாய் இருந்தார்கள். அதனால் பிள்ளைகள் கிறிஸ்துவை அறிகிற அறிவில் வளரவும், தங்களை சுற்றி வாழ்ந்த மக்களின் ஏழ்மையையும் அவர்கள் மத்தியில் காணப்பட்ட தேவையையும் நன்கு அறிந்து கொள்ள உதவியது. ஏழு பிள்ளைகளும் தங்கள் பெற்றோர் செய்த ஊழியத்திற்கு மிகவும் உதவியாக இருந்தார்கள். இவர்களின் பெண் குழந்தைகளில் மூத்த பிள்ளையாக பிறந்த இசபெல்லாவைப் பற்றி தான் இக்கட்டுரையில் பார்க்க உள்ளோம். இவர் கால்டுவெல் தம்பதியினரின் இரண்டாவது பிள்ளை. 1848 - ஆம் ஆண்டு இசபெல்லா இடையன்குடியில் பிறந்தார்.பத்து வயதாய் இருக்கும்போது, கால்டுவெல் ஐயர் குடும்பமாக ஒரு முறை இங்கிலாந்திற்கு சென்றனர். அச்சமயம் இங்கிலாந்தில் மாபெரும் ஆன்மீக எழுச்சி மாநாடு நடைபெற்றது. அதில் குடும்பமாக க...

Schwartz மாதிரியா? அல்லது ஒருமாதிரியா? REV.SWARTZ Ministry (Tamil & English)

Image
தலைவனின் முக்கிய பணி அநேக புதிய தலைவர்களை உருவாக்குவதே. தேவன் நமக்கு தலைமைத்துவத்தை அளிப்பது இரும்பு போல் பிடித்து ஆளுகை செய்ய அல்ல; மக்களுக்கு உதவியாக இருந்து அவர்களை சிறந்தவர்களாக உருவாக்கவே ஆகும். வேதத்தில் குறிப்பிட்டுள்ள தலைவர்கள், தேவன் தங்களுக்கு அளித்த தலைமைத்துவ பொறுப்பை சிறப்பாக செய்து முடித்தார்கள். அதன் விளைவாக அனேகதலைவர்கள் எழும்பினார்கள். பவுலை தொடர்ந்த தீமோத்தேயு, தீமோத்தேயு மூலம் உருவாக்கப்பட்ட தீத்து என தலைவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறதை நாம் பார்க்கலாம். நமக்கு முன்பாக வாழ்ந்து சென்ற முன்னோடி மிஷனெரிகளும் தங்கள் தலைமைத்துவ பொறுப்பை உண்மையோடும் உத்தமத்தோடும் நிறைவேற்றி சென்றனர். அவர்களின் பதவி, பணம், அதிகாரம் என அனைத்தையும் தியாகம் செய்து முன்மாதிரியான வாழ்வு வாழ்ந்தார்கள். அது மட்டுமல்லாது அநேகரை தலைவர்களாக உருவாக்கி அவர்களும் தேவ பணியை தொடர உற்சாகப்படுத்தினார்கள். சிறந்த தலைமைத்துவத்திற்கு உதாரணமாக “திருநெல்வேலியின் தந்தை” என்றழைக்கப்படும் சுவார்ட்ஸ் ஐயர் அவர்கள் விளங்கினார்கள். 1776 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் எட்டாம் தேதி சோனன் பர்க் என்...