Posts

Showing posts with the label Martyr

HUGH LATIMER லாட்டிமர் (Tamil & English)

Image
  1555, அக்டோபர் 16 ஆம் நாள்… கள்ளப்போதகன் என்று பட்டம் சூட்டப்பட்டு கம்பங்களில் கட்டப்பட்டு போகிப் பொங்கலன்று தூக்கி எரிக்கப்படும் தேவையற்ற பொருளாக வேத பண்டிதர் லாட்டிமர் நிறுத்தப்பட்டார் .  கிரியையை வலியுறுத்தி கிருபையை இருட்டடிப்புச் செய்ய அவர்கள் , சத்தியம் தவறாத தேவமகன் லாட்டிமர் தங்களோடு ஒத்துபோகாத காரணத்தால் கொலைக்குற்றம் சாட்டினர் . அவருடன் பிஷப் ரிட்லுயும் அதே காரணத்துக்காக முதுகோடு முதுகாக சேர்த்துக் கட்டப்பட்டு கொலைமரத்தில் கொண்டு நிறுத்தப்பட்டார் . இந்த விசுவாசப் படுகொலை  பார்க்க திரள்கூட்டம் கூடி வந்திருந்தது . பார்வையாளர்களுக்குத் தான் அன்றும் இன்றும் பஞ்சமில்லையே . இந்த மரணத்தால் தங்கள் ஆத்துமாவை கொல்ல முடியாது என்று மனத்தெளிவுடன் அந்தக் கொலைக் கம்பங்களையே லாட்டிமர் முத்தமிட்டார் . ரிட்லி வானத்தை அண்ணாந்து பார்த்து பிதாவே உமது கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் , என்று உரக்கச் சொன்னார் . திருச்சபையின் துரோகிகள் என்று இவர்கள் பொய் குற்றம் சாட்டினார்கள .; அக்கம்பங்களுக்கு தீமூட்டும் முன்னர் தங்கள் சடங்குபிசகாமல் இறுதிப் பிரசங்கம் ஒன்றை செய்தன...