Joshua Marshman ஜாஷ்வா மார்ஷ்மேன் (Tamil & English)

1768 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் வெஸ்ட்பெரி மாகாணத்தில் ஜாஷ்வா மார்ஷ்மேன் பிறந்தார்.  தன் தந்தை செய்து வந்த நெசவுத் தொழிலையே மார்ஷ்மேன் செய்து வந்ததால் சமுதாயத்தில் சொல்லிக் கொள்ளும்படியான எந்த அடையாளமும் இன்றி ஏழ்மையான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். நாட்கள் செல்ல செல்ல மார்ஷ்மேனின்  உள்ளம் இயேசுவுக்காக எதையாவது செய்ய உந்தித் தள்ளியது. கிறிஸ்துவின் அன்பிற்கு அடிபணிந்த அவர் பிரிஸ்டல் அகடமியில் கஷ்டப்பட்டு சேர்ந்து லத்தீன்,  கிரேக்கம், எபிரேயம், சீரியா ஆகிய மொழிகளில் புலமை பெற்றார்.  அங்கு கல்வி பயின்று வந்த நாட்களில்,  பாப்திஸ்து மிஷனெரி சொசைட்டி மூலம் வெளியிடப்பட்ட மாத இதழை படிக்க ஆரம்பித்தார் . அதன் மூலம் இந்தியாவில் பணியாற்றி வந்த வில்லியம் கேரியின் ஊழியங்களை பற்றி  தெரிந்துகொண்டார். 

தேவையுள்ள இந்திய தேசத்தை பற்றிய பாரம் அவரை அழுத்த,  இந்தியாவில் பணி செய்ய தன்னை ஆண்டவரிடம்  முழுமையாக அர்ப்பணித்தார். 1799ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13ம் நாள் தன் மனைவி ஹன்னா உடன் இந்தியா வந்தார். கப்பலிலிருந்து செராம்பூர் இறங்கிய உடன்  கரையில் நின்று கொண்டிருந்த அனைத்து மக்களுக்கும் முன்பாக முழங்கால் படியிட்டு தன் இருகரங்களையும் கூப்பி ஊக்கமாக ஜெபித்தார். கல்வி  இந்தியர்களுக்கு அடிப்படைத் தேவை  என்பதை உணர்ந்த மார்ஷ்மேன்,  ஆங்கில வழி கல்வி சாலையை செராம்பூரில் நிறுவினார். அவர் மனைவி ஹன்னா,  முதன் முதலில் பெங்காலிய  வழி கல்வி நிலையத்தை ஆரம்பித்தார். இப்பள்ளிகள் மூலம் கிடைக்கப் பெற்ற பணத்தை ஊழியங்களுக்கு என பயன்படுத்தினார்கள். 

ஜாஷ்வா மார்ஷ்மேன் ஒரு சிறந்த அறிஞர் ; பன்மொழி வல்லுனர்;  இறையியல் பட்டதாரி; சிறந்த எழுத்தாளர்; மட்டுமல்லாது புலவரும் கூட.  இப்படி தன்னுள் இருந்த அனைத்து திறமைகளையும்,  தாலந்துகளையும் இந்திய மக்களின் இரட்சிப்பிற்காக  அர்ப்பணித்து பயன்படுத்தினார்.  மார்ஷ்மேனும்  வில்லியம் கேரியும்  இணைந்து இராமாயணத்தை வங்காள மொழியில்  முதன் முதலில் செராம்பூர் அச்சகத்தில் அச்சிட்டனர்.  சுமார் 15 வருட கால கடின உழைப்பிற்குப் பின் சீன மொழியில் வேதாகமத்தை முழுமையாக மொழிபெயர்த்தார். இன்று சீனர்கள் வேதாகமத்தை பயன்படுத்த மார்ஷ்மேன் முக்கிய காரணமாக விளங்குகிறார்.  மேலும் முதன்முதலில் Sumachar Durpar என்ற நாளிதழை பெங்காலிய  மொழியில் வெளியிட்டார். அதனுடன் இணைந்து இந்தியாவின் நண்பன் என்கிற மாதாந்திர பத்திரிகையையும் வெளியிட்டார். 
 பின்னர் 1818 ஆம் ஆண்டு வில்லியம் கேரி,  மார்ஷ்மேன்,  வார்ட் மூவரும் இணைந்து செராம்பூர் பல்கலைக்கழகத்தை தோற்றுவித்தனர். 

Brown University 1811ம்  ஆண்டு Honorary Doctor of Divinity என்ற விருதை மார்ஷ்மேனுக்கு வழங்கி கௌரவித்தது. கிறிஸ்துவை பிரசங்கிக்க கூடாது என பலமுறை,  பல தடைகள் இவருக்கு வந்த போதிலும் அவற்றை கிறிஸ்துவின் துணையோடு தாண்டினார்.  மக்கள் மனதில் நிறைந்து இருந்த அசுத்தங்களை அகற்றி விட்டு இயேசுவை அவர்கள் உள்ளத்தில் கொடுத்து மகிழச் செய்தார். 1837 ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் நாள் செராம்பூரில்  மரித்து  அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார். 

 இன்று நம்மிடமும் சொல்லிக் கொள்ளும் படியான குடும்ப பின்னணியம் இல்லாமல் இருக்கலாம். சமுதாயத்தில் அங்கீகரிக்கப்படாத நிலையில் இருக்கலாம். இவற்றையே  எண்ணி சலித்துக் கொள்ளாமல் நமக்குள் புதைந்து இருக்கும் தாலந்துகளை வெளியே கொண்டுவர முயற்சி செய்வோம்.  அவற்றை கிறிஸ்துவுக்காக செலவு செய்ய அர்ப்பணிக்கும் போது தேவன் நம்மையும் மார்ஷ்மேனைப் போல சுடர்விடும் தீபங்களாய் மாற்றுவார்.  

Joshua Marshman was born in 1768 in Westbury, England. Marshman lived a poor life without any social identity as he followed his father's weaving business. As the days went by, Marshman's heart was driven to do something for Jesus. Surrendering to the love of Christ, he studied hard at Bristol Academy and acquired knowledge in Latin, Greek, Hebrew, and Syriac. During his studies there, he started reading the monthly magazine published by the Baptist Missionary Society. Through that, he came to know about the activities of William Carey, who was working in India.

The burden of the needy nation of India pressed upon him, and he devoted himself fully to the Lord to work in India. He came to India on October 13, 1799, with his wife Hannah. As soon as he got off the ship at Serampore, he knelt before all the people standing on the shore, folded his hands, and prayed fervently. Realising that education was a basic need for Indians, Marshman established the English Medium Education Road in Serampore. His wife, Hannah, started the first Bengali medium of education. The money received from these schools was used for services.

Joshua Marshman is a great scholar, multilingualMultilingual graduate in theology, andBest writer. Not only that, but he is also a poet. In this way, he dedicated and used all his skills and talents for the salvation of the people of India. Marshman and William Carey jointly printed the Ramayana in Bengali for the first time at the Serampore Press. After about 15 years of hard work, he completely translated the Bible into Chinese. Marshman is the main reason why the Chinese use the Bible today. He also published Sumachar Durpar, the first newspaper in Bengali. Along with it, he also published a monthly magazine called India's Friend. Then, in 1818, William Carey, Marshman, and Ward founded Serampore University.

Brown University awarded Marshman an honorary doctor of divinity in 1811. Although many obstacles came to him in his efforts to preach Christ, he overcame them with the help of Christ. He removed the impurities that filled people's minds and gave Jesus into their hearts to make them happy. He died at Serampore on December 5, 1837, and was buried there.

We may not have the same family background as we are told today. May be unrecognised in society. Let's try to bring out the talents that are buried within us without getting bored with them. God will turn us into burning torches like marshmallows when we devote them to Christ.

 


Comments

Popular posts from this blog

குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!

கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் Graham Staines

வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)