ROBERT CALDWELL - Idayangudi Missionary (Tamil & English)

ROBERT CALDWELL

கீழ் நெல்லை அப்போஸ்தலன் என்று அழைக்கப்பட்ட ராபர்ட் கால்டுவெல் 1814ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி அயர்லாந்தில் பிறந்தார். தொடக்கத்தில் தானாகவே கல்வி பயின்ற இவர் தனது கல்லூரி படிப்பை கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பயின்றார். அங்கு அவருக்கு மொழியியல் ஆராய்ச்சியிலும் சமூகப்பணியிலும் அதிக ஆர்வம் ஏற்பட்டது. தனது இருபத்து நான்காம் வயதில் தேவனுடைய அழைப்பை ஏற்று லண்டன் மிஷனரி சொசைட்டி உதவியுடன் இந்தியாவிற்கு புறப்பட்டார். அவர் சிறந்த ஓவியர்.  தன் தாயிடம் விடை பெறும் போது , தாய் அவரை நெற்றியில் முத்தமிட்டு மகிழ்வுடன் உன்னை அனுப்புகிறேன். என் சிந்தையில் கூட முறுமுறுப்பில்லாமல் உன்னை கர்த்தருக்கு மனப்பூர்வமாக கொடுக்கிறேன் என்றார். கப்பலில் பயணித்த போது கடலில் ஏற்பட்ட சூரை காற்று காரணமாக எதிராக வந்த பிரெஞ்ச் கப்பலுடன் மோதி மூழ்கியதில் ஆறு பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். அதில் ராபர்ட் கால்டுவெல்லும் ஒருவர். தேவன் அவரை பற்றிய உயர்ந்த நோக்கம் தெளிவாக இதில் தெரிந்தது.

சென்னையில் மூன்று ஆண்டுகளில் தமிழ் மொழியையும் வடமொழியையும் கற்று இரண்டு மொழிகளிலும் புலமை பெற்றார். பின்னர் திருநெல்வேலி மாவட்டத்தில் எந்த வசதியும் இல்லாமல் ஒரு சீற்றூராக காட்சியளித்த இடையன்குடி என்ற கிராமத்திற்கு நடந்தே  வந்து சேர்ந்தார். தெருக்களை எல்லாம் நேர் வரிசை படுத்தி இரண்டு பக்கமும் மரங்களை நட்டினர்.  எதிர்ப்புகளையும் சந்தித்தார். எனினும் இடையன்குடியை முன்மாதிரியான கிராமமாக உருவாக்க கடினமாக உழைத்தார். தமிழ்மொழியில் அவருக்கு அதிக ஆர்வம் இருந்ததினால் ஆராய்ச்சி செய்து இலக்கணம் வகுத்தார். தென்னிந்தியாவில் புகழ் பெற்று விளங்கும் தமிழ்தெலுங்குமலையாளம்கன்னடம், துலு ஆகிய 5 மொழிகளும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவை என்றும் அவற்றை திராவிட மொழிகள் என்றும் அழைத்தார். அவற்றுள் தமிழ்மொழியே பழமை வாய்ந்தது  என்றும் கூறினார். திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதி, உலகால் போற்றப்பட்டார். 
 தன்னை அன்போடு ஏற்றுக் கொண்ட திருநெல்வேலி மாவட்டத்திற்கு நன்றி செலுத்தும் வகையில் அந்த மாவட்டத்தின் வரலாற்றை ஆராய்ந்தார். நாணயங்கள் பாண்டிய நாட்டுக் காசுகள் என பலவற்றை சங்க இலக்கியங்களின் ஏட்டு பிரதிகளை படித்து  வெளி கொண்டுவந்தார்.  மேலும் திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு என்னும் நூலை எழுதினார். இந்நூலை மதராசு அரசு வெளியிட்டு கால்டுவெலை பாராட்டியது. இலக்கியப் பணிகளை மட்டுமல்லாது சமயப் பணிகளையும் இடையன்குடியில் செய்து வந்தார். பெண்களுக்கு கல்வி வசதிமிஷனரிகள் தங்குவதற்கு பங்களா, பள்ளிக்கூடம்ஆலயம் போன்றவற்றை தோற்றுவித்து மக்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை கொண்டு வந்தார்.  வெறுங் காலால் நடந்து சென்றே  சுவிசேஷப் பணியை அறிவித்து வந்தார். இவரது தியாகமான பணியின் மூலமாக அனேக போதகர்கள், மிஷனரிகள் எழுப்பப்பட்டனர். நாசரேத்துக்கு வந்த மர்காஷியஸ் ஐயர் இவரால் உருவாக்கப்பட்டவரே. தமிழகத்தின் வெப்பத்தினால் கழுத்தளவு தண்ணீரில் உட்கார்ந்து தனது எழுத்துப் பணிகளை நிறைவேற்றினார். 53 ஆண்டுகள் இந்திய மண்ணில் செலவிட்ட போதும்சுமார் மூன்று முறை மட்டுமே தன் சுகவீனம் நிமித்தம் தன் தாய் நாட்டிற்கு சென்றார். நண்பர்கள் அவரை எவ்வளவோ வற்புறுத்தியும் அங்கேயே  இருக்க மனம்  விருப்பம் அளிக்கவில்லை.  இத்தனை காலமும் இந்தியர்களுக்காகவே வாழ்ந்தேன்உயிர் உள்ளளவும் அவர்களுக்காகவே உழைப்பேன், அவர்கள் நாட்டிலேயே உயிர் துறப்பேன் என்று கூறி மீண்டும் தமிழகத்திற்கு வந்து தன் பணியைத் தொடர்ந்தார். 1891ம் ஆண்டு கொடைக்கானலில் தங்கி இருந்தபொழுது தனது 77 ஆம் வயதில் மரணமடைந்தார்.   அவரது உடலை 24 நபர்கள் தங்கள் தோளில் சுமந்து  கொடைக்கானலில் இருந்து இடையன்குடிக்கு நடந்தே கொண்டுவந்து அவர் உருவாக்கிய தேவாலயத்தில் நல்லடக்கம் செய்தனர். அவரது விருப்பமும் அதுவே.  

  இத்தேவாலயத்தில் உள்ள  joybell மணியில் இசைக்கப்படும் பாடல்  சத்தமானது  சுமார் ஐந்து கிலோமீட்டர் வரை கேட்கும் திறன் கொண்டது. உலகத்தில்  இரண்டே இரண்டு இடங்களில் இருக்கும் joybell   மணியானது ஒன்று  லண்டனிலும் மற்றொன்று இடையன்குடியிலும்  உள்ளது. இன்றும் உலகமே இவரது பணியை எண்ணி போற்றுகிறது.தமிழ்மொழி மேலை நாட்டினர்  ஒருவரால் மேன்மை அடைந்தது என்று கூறினால் மிகையாகாது. 

 நாமும் நம்முடைய வாழ்வை கால்டுவெல்லை போல பயன்பட தேவனிடம் ஒப்புக் கொடுப்போம். ஒரே ஒரு வாழ்க்கை அதை கிறிஸ்துவுக்காக வாழ்வோம்.


Robert Caldwell, known as the Apostle of the Lower Nell, was born in Ireland on May 7, 1814. Initially self-educated, he did his college studies at the University of Glasgow. There, he became interested in linguistic research and social work. At the age of twenty-four, he accepted God's call and left for India with the help of the London Missionary Society. He is a great painter. Saying goodbye to his mother, the mother kisses him on the forehead and happily sends him off. She said, "I give you to the Lord wholeheartedly, without grumbling even in my thoughts." Only six men survived when the ship collided with an oncoming French ship due to a gale at sea. Robert Caldwell was one of them. God's high purpose for him was clearly seen in this.

 He learned Tamil and vernacular in three years in Chennai and became proficient in both languages. Then he walked to Idayankudi, a village in Tirunelveli district, which looked like a mess without any facilities. They lined up all the streets and planted trees on both sides. He also faced opposition. However, he worked hard to make Idayankudi an exemplary village. As he was very interested in the Tamil language, he researched and formulated a grammar. He called the five languages Tamil, Telugu, Malayalam, Kannada, and Tulu, which are popular in South India, belonging to the same family and called them Dravidian languages. He also said that the Tamil language is the oldest among them. He wrote a book called A Comparative Grammar of Dravidian Languages, which was admired by the world. He explored the history of Tirunelveli district in gratitude for its warm welcome. He studied eight copies of the Sangam literature and brought out many such coins and coins of the Pandiyan country. He also wrote a political and general history of Tirunelveli District. The book was published by the government of Madras, and Caldwell was praised. He did not contribute only literary works but also religious works to Idayankudi. He brought renaissance into the lives of the people by establishing educational facilities for women, bungalows for missionaries to stay in, schools, and temples. He preached the gospel while walking barefoot. Many pastors and missionaries were raised through his sacrificial work. Marcius Iyer, who came to Nazareth, was created by him. Due to the heat of Tamil Nadu, he sat in neck-deep water and completed his writing work. Despite spending 53 years on Indian soil, he visited his mother country only three times due to his ill health. No matter how much his friends urged him, he did not want to stay there. He came back to Tamil Nadu and continued his work, saying that he has lived for Indians all this time, he will work for them till the end of his life, and he will give up his life in their country. He died at the age of 77 in 1891 while staying at Kodaikanal. His body was carried on their shoulders by 24 people on foot from Kodaikanal to Idayankudi and buried in the church he built. That is his wish.

  The song played on the joybell in this temple is loud enough to be heard for about five kilometres. There are only two joybells in the world, one in London and the other in Idyankudi. Even today, the world appreciates his work. It would not be an exaggeration to say that the Tamil language excelled by one.

Let us surrender our lives to God to be used like Caldwell. We only have one life, and we live it for Christ.

Comments

  1. Holy Holy Holy was Written by Bishop Reginald Heber not Robert Caldwell

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!

கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் Graham Staines

வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)