Isabellah Thoburn
இசபெல்லா தோபர்ன் "இந்தியப் பெண் ஒருவருக்கு கல்வி கற்பிப்பதை விட 50 அடி உயரமுள்ள சுவரில் ஏறுவது சுலபம்" என்று இந்தியாவின் ஆண்களுக்கென முதல் கல்லூரியை ஆரம்பித்த அலெக்சாண்டர் டஃப் என்ற மிஷனெரி கூறுகிறார். ஆம், 18 - ஆம் நூற்றாண்டில் இந்தியப் பெண்களின் நிலை இப்படித்தான் இருந்தது. ஜேம்ஸ் தோபர்ன் என்ற மெத்தடிஸ்ட் பிஷப் வட இந்தியாவிற்கு வந்த போது எந்த பெண்ணிற்கும் எழுத படிக்க தெரியவில்லை. இந்துக்கள் மத்தியில் பெண் கல்வியை பற்றிய ஆழ்ந்த தவறான கருத்துக்கள் காணப்பட்டது. இந்நிலையை மாற்ற விரும்பிய ஜேம்ஸ் 1866 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் வாழ்ந்து வந்த தன் தங்கைக்கு இந்தியப் பெண்களின் நிலையைப் பற்றி விவரித்து கூறினார். இறையியல் கல்வி கற்ற இசபெல்லா தோபர்ன் தான் செய்ய வேண்டிய பணி மிகவும் பெரியது என எண்ணி இந்தியாவிற்கு வர தயாரானார். அவரோடு இணைந்து கிளாரா A.சுவைன் அவர்களும் 1869 ஆம் ஆண்டு நவம்பர் 3 - ஆம் தேதி பாஸ்டனிலிருந்து புறப்பட்டனர். 1870 - ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் நாள் மும்பை பட்டணத்தில் கப்பல் இறங்கினர். இந்தியப் பெண்களின் நிலையைக் கண்டு அதிக பாரம் ...