Posts

Showing posts with the label Sikh at Patiala

கர்த்தார் சிங் KARTHAAR SINGH (Tamil & English)

Image
  கர்த்தார் சிங், பஞ்சாப் மாநிலத்தில் செல்வந்தரான சீக்கியப் பெற்றோருக்குப் புதல்வனாகத் தோன்றினார். அவருடைய தகப்பனார் பஞ்சாபில் ஒரு பெரிய ஜமின்தாராக இருந்தார். கர்த்தார் சிங் ஏகப் புதல்வனாக இருந்தபடியினால் குடும்பத்தினருடைய நம்பிக்கை அனைத்தையும் அவரையே சார்ந்திருந்தது.  சுகபோகமாக வளர்க்கப்பட்டார்.இவருடைய தந்தை மகனுக்கு எல்லாவிதமான பயிற்சிகளையும் கொடுத்து வந்தார். மத சம்மதமான பயிற்சிகள் ஒன்றும் பெறாதிருந்த போதிலும், ஆவிக்குரிய காரியங்களில் ஒருவிதமான வாஞ்சை அவர் உள்ளத்திலே ஏற்பட்டுக் கொண்டே வந்தது. அவர் கிறிஸ்தவ மதத்தைக் குறித்துக் கேள்விபட்டு கொஞ்சங் கொஞ்சமாக கிறிஸ்தவ மதத்தில் கூறப்பட்டுள்ள சத்தியங்கள் அவர் உள்ளத்தைக் கவர்ந்தன. தான் ஒரு கிறிஸ்தவன் என்று பகிரங்கமாக அறிக்கை செய்தார். கர்த்தார் தன்னுடைய வீட்டிலிருந்து வெறுமையாகத் துரத்தப்பட்டார்.  தன்னுடைய வயிற்றுப் பசி தீர்க்கவும், நிர்வாணத்தை மூடவும் ஒரு கூலி ஆளாக அமர வேண்டியிருந்தது. வெகு சீக்கிரத்தில் கர்த்தார் பஞ்சாபில் உள்ள கிராமங்களிலும், பட்டணங்களிலும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கலானார். பஞ்சாபில் அநேக இடங்களில் சுவிசேஷத்...