குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!
பரஹத் என்பது அவரது இயற்பெயர். எகிப்தின் தலைநகராகிய கெய்ரோவில் ஒரு பிரபலமான நிறுவனத்தின் ஆலோசகராக பணிபுரிந்து வந்தார். ஒருநாள் விலை மதிப்புள்ள அவரது கைக்கடிகாரம் காணாமல் போனது. அதன் நிமித்தம் இடிந்து போயிருந்தார். சில நாட்களுக்குப் பின் ஒரு பெரும் ஆச்சரியம் காத்திருந்தது. தெருவெல்லாம் குப்பை குவியலில் கோமேதகம் தேடுவது போல் கிளறித் திரியும் ஒரு மனிதன் அவரது வீட்டின் கதவைத் தட்டினான். அருவருப்போடும் அலட்சியப் போக்கோடும் அதட்டும் மொழியில் 'என்ன வேண்டும்' என்று கேட்டார். அந்த மனிதனின் முகத்தில் ஒரு அலாதி ஜொலிப்பு. தரித்திரத்தையும் மீறி பிரகாசமாய் அவனை வட்டமிட்டிருந்தது. வந்தவன்,"ஐயா, உங்கள் பொருள் ஏதேனும் காணவில்லையா? இந்த அடுக்கத்தில் பலரிடம் கேட்டு விட்டேன். எவரும் எதையும் இழக்கவில்லை என்று கூறிவிட்டார்கள். நீங்கள் எதையும் இழந்து தவிக்கிறீர்களா?" என்று பணிவோடு கேட்டு பரஹத்தின் பதிலுக்காகக் காத்திருந்தான்! "ஆமாம்! எனது விலையுயர்ந்த கைக்கடிகாரத்தை பறிகொடுத்து சில நாளாய் தவியாய் தவிக்கிறேன்" என்றார். "அப்படியா? இதோ பாருங்கள். இது உங்களுடையது தானோ? "...