William Carey-4 (Tamil & English)
வில்லியம் கேரி தான் செய்த ஒவ்வொரு பணியையும் தேவ ஒத்தாசையோடும், பெலத்தோடும் செய்து வந்தார். தேவன் அவரை வல்லமையாக பயன்படுத்தினார். ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் பவுர்ணமி தினத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கங்கை நதியில் கூடுவது வழக்கம். தங்களுக்குக் குழந்தை இல்லை என்றும், கங்காதேவி தங்களுக்குக் குழந்தை தந்தால் ஒரு குழந்தையை கங்கா தேவிக்கே திரும்ப கொடுப்போம் என்று அவர்கள் உறுதி கூறுவார்கள். எனவே ஆயிரமாயிரமான பெண்கள் தங்கள் உறுதியை நிறைவேற்ற ஜனவரி மாதம் கங்கை நதியில் கூடுவார்கள். "தேவி எழும்பி வருகிறாள்" என்ற குரல் கேட்டவுடன் தங்கள் அழகுப் பிள்ளைகளை கங்கை நதியில் வேகமாக வீசுவார்கள். பல நூற்றாண்டுகளாக நடந்து வரும். இந்த நிகழ்வை தடுக்க வேண்டி கேரி, தேவனை நோக்கி ஜெபித்து வந்தார். வெல்லெஸ்லி பிரபு இந்தியாவின் கவர்னர் என்ற முறையில் இதனைத் தடை செய்து சட்டம் போட முடியுமா? என்று யோசித்து அவரைத் தொடர்பு கொண்டார். "இந்து மக்களின் வேதத்தில் இப்படிச் செய்வது எழுதி இருந்தால் நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஏனெனில் மத உரிமைகளில் நான் தலையிட இங்கிலாந...