மெரிலின் லசோலா, Merlin Lasola (Tamil & English)
பாப்புவா நியூ கினித் தீவில் வாழும் மக்கள் 700 விதமான மொழிகளைப் பேசுகிறார்கள் . அதில் செப்பிக் இவாம் என்பதும் ஒன்று . அம்மொழியில் வேதாகமத்தை மொழிபெயர்த்துக் கொடுக்க மெரிலின் லசோலா என்ற பெண் ஊழியர் புறப்பட்டுச் சென்றார் . செப்பிக் இவாம் மொழிக்கு எழுத்து வடிவம் கிடையாது . அது ஒரு பேச்சு மொழி ஹவுனா கிராமத்தில் தளம் அமைத்து தன் உடன் ஊழியருடன் மெரிலின் தனது ஊழியத்தை ஆரம்பித்தார் . அவ்வூரில் மந்திரவாதிகள் அதிக சுறுசுறுப்பாகவே காணப்பட்டனர் . யாருக்காவது சுகமில்லை என்றால் அவர்களது கூரிய மூங்கிலால் நெற்றியைக் கீறுவார்கள் . பின் அதிலிருந்து வெளிப்படும் இரத்தம் சுகவீனத்தினிமித்தம் கெட்டு விட்டது என்று கூறி ஒருவித இலையை வாயில் மென்று கொண்டே அவர்கள் காயமுண்டாக்கின நெற்றியில் துப்புவார்கள் . அதன் மூலம் அசுத்த ஆவிகள் நோய்கண்டவர்களிடமிருந்து நீங்குவதாக அந்த ஊர் மக்களை மந்திரவாதிகள் ஏமாற்றி வந்தனர் . அவர்கள் அப்படி உமிழ்வதால் மந்திரவாதிகளை " துப்புவோர் " என்ற பெயரில் அழைத்தனர் . மெரிலின் தன் உடன் ஊழியருடன் அன்றாடம் மொழி பெயர்த்த பகுதிகளை அவ்வூர் முதியவர்களைக் கூடிவரச் செய்து இரவு...