Benjamin Henry Arthur Margoschis, Nazareth Missionary, From England 1852-1908 பெஞ்சமின் ஹென்றி ஆர்தர் மர்காஷிஸ் (Tamil & English)
சரித்திர புருஷர்கள் : பெஞ்சமின் ஹென்றி ஆர்டர் மர்காஷிஸ் பெஞ்சமின் ஹென்றி ஆர் த ர் மர்காஷிஸ் 1852 ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி இங்கிலாந்திலுள்ள ரெமிங்டன் என்ற ஊரில் பிறந்தார். 1875 ஆம் ஆண்டு இடையன்குடியில் மிஷனரியாக பணிபுரிந்து வந்த பேராயர் ராபர்ட் கால்டுவெல், விடுமுறைக்காக இங்கிலாந்து சென்றிருந்த போது இந்தியர்களின், குறிப்பாக தென் தமிழக மக்களின் நிலையை பற்றியும், அவர்கள் மத்தியில் பணிசெய்ய ஊழியர்கள் தேவை எனவும் அறைகூவல் விடுத்தார். இதனை தேவனுடைய கட்டளையாக ஆர்தர் மர்காஷிஸ் ஏற்றுக்கொண்டார். தான் பயின்று வந்த மருத்துவ கல்வியை பாதியிலேயே நிறுத்திவிட்டு இந்தியாவிற்கு புறப்பட தயாரானார். கல்லூரி படிப்பை முழுமையாக முடித்தபின் செல்லுமாறு நண்பர்களும் உறவினர்களும் எவ்வளவோ கூறியும் தன் முடிவில் மர்காஷிஸ் உறுதியாக இருந்தார். 1875 ஆம் ஆண்டு, 22வயதான வாலிபன் மர்காஷிஸ், இந்தியாவிற்கு வந்து கால்டுவெல் அய்யரின் கீழ் சிலகாலம் பயிற்சிகளை மேற்கொண்டார். பின் 1876 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாசரேத்தில் தன்னுடைய ஊழிய பணியை ஆரம்பித்தார். சுவிசே...