லோத் கேரி (1780-1828) Lot Carey ( Tamil & English)

 லோத் கேரி ஒரு பாப்திஸ்து சபை போதகர்.  1820ல் லைபீரிய காலனி உருவாக ஒரு காரணமாக செயல்பட்டார். 1780 இல் வெர்ஜீனியாவில் உள்ள சார்லஸ் சிட்டி என்ற நகரில் அடிமையாக பிறந்ததால் ஜான் பௌரி  என்பவரிடம் அடிமையாக வாழ்ந்து வந்தார். இவரது எஜமான் ஒரு மெத்தடிஸ்ட் போதகர் என்பதால் கேரிக்கு கொஞ்சம் சுதந்திரம் கிடைத்தது. 1807 ஆம் ஆண்டு ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை ஆராதனையில் கொடுக்கப்பட்ட செய்தி இவருக்குள்  மிகுந்த தாக்கத்தை உண்டாக்கியது. “நீ மறுபடியும் பிறக்க வேண்டும்“ என்ற வாக்கியம் மீண்டும் மீண்டும் அவள் செவிகளில் ஒலித்து,  இருதயத்தில் கிரியை செய்ய ஆரம்பித்தது. இதன் விளைவாக அவர் ஒரு புது மனிதனாக மாற்றம் பெற்று, மாபெரும் மகிழ்ச்சியையும்,  ஈடு இணையில்லா சந்தோஷத்தையும் தரும் இரட்சிப்பின் அனுபவத்தையும் பெற்று கொண்டார்.  
கேரி ரிஷ்மனன் என்னும் பகுதியில்  அமைந்த முதல் பாப்திஸ்து சபையில் இணைந்தார்.  அது வெள்ளை மற்றும் கருப்பு இன அடிமைகள் மற்றும் சுயாதீன ரின் சபையாக இருந்தது. அக்காலத்தில் நடந்த சமூக மற்றும் சமய சீர்திருத்தங்களின் காரணமாக அநேக மெத்தடிஸ்ட் மற்றும் பாப்திஸ்து போதகர்கள்  தங்கள் சபையை சேர்ந்த அநேக அடிமைகளின் வாழ்வை முன்னேற்றும் பணியை மேற்கொண்டனர். லோத்  கேரி தன் போதகர் ஜானிடம் ஞானஸ்தானம் பெற்றார். இதன் மூலம் படிக்கவும், எழுதவும் வேதாகமத்தை கற்கவும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.  அடிமைகளுக்கான ஒரு சிறிய பள்ளியில் பயிலவும் கேரிக்கு வாய்ப்பு கிடைத்தது. இவரை போன்ற  20இளம் அடிமைகளுக்கு நியூயார்க்கின், நியூஜெர்ஸி நகரை சேர்ந்த டேக்கன் வில்லியம் கேரேன் 1812ல்  ஆசிரியராக பணியாற்றினார். அவர் தன்னுடைய மாணவர்கள் ஒவ்வொரு வாரமும் மூன்று நாட்கள்  மாலையில் கூடி படிக்கவும் மருத்துவம் மற்றும் வேதத்தை பயிலவும் வாய்ப்பை உண்டாக்கினார்.  
எழுதப்படிக்க கற்று கொண்ட கேரி,  சாதாரண கூலி தொழிலாளியாக இருந்து பின்னர்,  குமாஸ்தாவாகவும்,  ரிச்மவுண்டில் உள்ள புகையிலை எஸ்டேட்டின் புகையிலை தொழிலாளர்களின் மேற்பார்வையாளராகவும் உயர்ந்தார்.  கேரியின் நேர்மை மற்றும் கடமை உணர்ச்சியினால் கவரப்பட்ட அவர்  முதலாளி,  அவருக்கு பல வெகுமதிகளையும்,  ஐந்து டாலர்களையும் கொடுத்தார்.  மேலும் தூள் புகையிலையை சிறிய பைகளில் அடைத்து விற்கவும்,  அதில் வரும்  வருமானத்தை கேரியே பயன்படுத்தி கொள்ளவும் சுதந்திரம் கொடுத்தார்.  இதன் மூலம் கேரிக்கு பணம் சேகரிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 
வாழ்க்கையை ரிசமவுண்டில் தொடர்ந்தார். அக்காலத்தில் முன்னேற வாஞ்சையுள்ள  கருப்பு இன மக்களுக்கான நிறைய வேலை வாய்ப்புகள் இருந்தன.எனினும் லோத்  கேரி கிறிஸ்துவின் மீதுள்ள தனியாத அன்பினால் ஈர்க்கப்பட்டார். 1813 இல் ஒரு  முழுநேர பாப்திஸ்து போதகரானார்.  பகுதி நேரமாக மருத்துவப் பணியையும் செய்து வந்தார் . 1815இல் கேரியும் அவரது  சக தோழருமான காலனினும் ரிசமவுண்டில்  இருந்து அமெரிக்க மிஷனெரி  சொசைட்டிக்கு  உதவி வந்தனர்.

 ஆப்பிரிக்க மிஷனரி பயணம்: 
 கேரி தான் ஆப்பிரிக்காவிற்கு மிஷனெரியாக செல்ல விரும்புவதாக அறிவித்தபோது,  புகையிலை தொழிற்சாலையில் அதிகமாக 200 டாலர் சம்பளம் தருவதாகவும்,  இங்கேயே வேலையை தொடரும் படியாகவும் கூறினார்கள். ஆனால் கேரி அவற்றிற்கு மயங்கவில்லை. கேரி தன்னுடைய நிறம்,  தான் செய்யப்போகும் பணிக்கு இடையூறாக இல்லாத ஒரு ஆப்பிரிக்க சமுதாயத்தில் வாழவும்,  அவர்களுக்கு விடுதலையின் சுவிசேஷத்தை அறிவிக்கவும் வாஞ்சையாக இருந்தார்.  இவர் மூலமாக 1815இல் ஆப்பிரிக்க பாப்திஸ்து மிஷனெரி  சொசைட்டி ஆரம்பிக்கப்பட்டது 1821ல் ஜனவரி 16ஆம் நாள் அட்லாண்டிக் கடல் வழியாக 44 நாட்கள் பயணத்திற்குப் பிறகு கேரி அமெரிக்க காலனி நாடான சியரோ லினேன்னை  அடைந்தார். அமெரிக்க காலனியை உருவாக்குவதை விட மிஷனெரி பணியை மிகவும் ஆர்வமுடன் மேற்கொண்டார். 1822ல்  மன்ரோலியாவிற்கு இடம்பெயர்ந்தார். அங்குதான் லைபீரியாவின் முதல் திருச்சபையை கட்டினார். அந்த சபைக்கும் அங்குள்ள பூர்வீக குடிகள் மற்றும் ஆதிவாசி மக்களுக்கும்  சுவிசேஷத்தை அறிவித்தார்.  

 கேரி வாரத்தின் பல நாட்கள் சபையின் சிறுபிள்ளைகளுக்கு போதித்து வந்தார்.  அவர்களுக்காக ஒரு பள்ளியையும் ஆரம்பித்தார்.மேலும் தன் சொந்த பணத்தின் மூலம் A week day charity schoolஐ நடத்தி வந்தார். மாண்டிக் இன ஆதிவாசி மக்கள் அந்தப் பள்ளியை எதிர்த்தனர். பலவகைகளில் கேரிக்கு இடையூறு விளைவித்தனர். எனினும் கேரி தளராமல் 35 மாணவர்களைக் கொண்ட பள்ளியை உருவாக்கினார். 29டாலர் சம்பளத்தில் ஒரு ஆசிரியரையும் வேலைக்கு அமர்த்தினார். தன் அமெரிக்க நண்பர்களிடமிருந்து பழைய ஆடைகளை வருவித்து அப்பிள்ளைகளுக்கு அளித்து உதவி செய்து வந்தார்.  

 இந்நிலையில் புதிதாக அமெரிக்காவிலிருந்து வந்து ஆப்பிரிக்காவில்  குடியேறிய அடிமைகள் பலர் நோய்வாய்ப்பட்டனர்.  அவர்களுக்கு மருத்துவம் செய்ய மருந்துகளோ,  மருத்துவர்களோ அங்கு இல்லை. லோத் கேரி  தன் அறிவாற்றலால் மூலிகையின் மூலம் அவர்களுக்கு மருத்துவம் பார்த்து   பலரது உயிர்களை காப்பாற்றினார்.  புதிதாக வந்தவர்களுக்கும்,  பூர்வீக குடிகளுக்கும்  இடையில் அடிக்கடி இடத்திற்காக  ஏற்பட்ட சண்டைகளை களைந்து அவர்களுக்கு சரியாக இடங்களைப் பிரித்துக் கொடுத்தார்.  விரைவில் லைபீரியா காலனியின்  மதிப்பிற்குரிய கவர்னராக மாறினார். 

லோத் கேரி,ஆப்பிரிக்காவிலுள்ள அடிமை சந்தையில் இருந்த 800 அடிமைகளை மீட்டு அவர்களுக்கு பள்ளிக்கூடம் ஆரம்பித்து அவர்களுக்கு புதுவாழ்வு அளித்தார்.  1817 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட அமெரிக்க காலனி சொசைட்டி அமைப்பின் மூலம் ஒரு சில  நண்பர்கள் இணைந்து பணம் திரட்டி அடிமைகளை மீட்டு வந்தனர். 1878ல் கப்பலில் சில பொருட்களை ஏற்றும் போது ஏற்பட்ட தீ விபத்தில் கப்பலிலேயே லோத் கேரி  மரணமடைந்தார். 

 அடிமையாக பிறந்த நான்  சுயாதீனனாக  மாறி என்னுடைய வாழ்க்கையை முன்னேற்றிக் கொண்டேனா என்பது முக்கியமல்ல. அடிமையாக தூரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் என் இன சகோதரர்களுக்கு என்ன செய்தேன் என்பதே முக்கியம். என்னுடைய தியாகத்திற்கான பலனை நான் தேடவில்லை. நான் இந்த உலகத்துக்கு வந்த நோக்கம் என் இன சகோதரர்களுக்காகவும்,  கிறிஸ்துவுக்காகவும் உழைக்க வேண்டும் என்பதே – இவையே லோத் கேரியின் வாஞ்சையாக இருந்ததோடு மட்டுமல்லாது,  அவற்றை நிறைவேற்றவும் செய்தார்.  கிறிஸ்துவுக்காக எனது அனைத்து சொத்து,  சுதந்திரத்தை இழப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்-  இது லோத் கேரி  கப்பல் ஏறும் முன் சொன்ன கடைசி  வார்த்தையாகும். 
இதை வாசிக்கும் நாம்  கிறிஸ்துவுக்காக எவற்றை இழக்கப் போகிறோம்? 
  அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன். குப்பையுமாக எண்ணுகிறேன். பிலிப்பியர் 3:11

Lot Carey is a Baptist pastor. He was instrumental in establishing the colony of Liberia in 1820. Born a slave in Charles City, Virginia, in 1780, he lived as a slave to John Bowry. As his master was a Methodist preacher, Carey was given some freedom. One day in 1807, a message given at a Sunday service made a great impression on him. The phrase “Thou shalt be born again” rang again and again in her ears and began to work in his heart. As a result, he was transformed into a new man and experienced a salvation that gave him great joy and incomparable happiness. Carey Rishman joined the First Baptist Church in the area. It was a congregation of white and black slaves and freedmen. Because of the social and religious reforms of the time, many Methodist and Baptist pastors took on the task of improving the lives of many of the slaves who belonged to their congregations. Lot Carey was baptized by his pastor, John. This gave him the opportunity to read, write, and learn the scriptures. Carey also had the opportunity to attend a small school for slaves. In 1812, Dacon William Caren of New York, New Jersey, worked as a teacher for 20 young slaves like him. He made it possible for his students to meet three days a week in the evening to study medicine and the Bible. Carey, who learned to write, rose from a simple labourer to a clerk and overseer of tobacco workers on a tobacco estate in Richmount. Impressed by Carey's honesty and sense of duty, his boss gave him several rewards and five dollars. He also gave him the freedom to sell powdered tobacco in small bags and to use the proceeds himself. This gave Carey an opportunity to raise money. Continued life in Risemount. There were plenty of job opportunities for aspiring blacks at the time, but Lott was drawn to Carey's unique love for Christ. Became a full-time Baptist minister in 1813. He also did part-time medical work. In 1815, Carey and his colleague Colonin came from Risemount to help the American Missionary Society.

 African Missionary Journey:

When Carey announced that he wanted to go to Africa as a missionary, they were told that the tobacco factory would pay him $200 more and continue his work here. But Carey was unfazed by them. Careylonged to live in an African society where his colour would not be a hindrance to the work he was about to do, and to preach the gospel of liberation to them. Through him, the African Baptist Missionary Society was started in 1815. On January 16, 1821, after a 44-day journey across the Atlantic Ocean, Carey reached the American colony of Sierra Leone. He was more interested in missionary work than in establishing an American colony. Moved to Monrolia in 1822. It was there that he built the first church in Liberia. He preached the gospel to that congregation and to the natives and Adivasi people there.

Carey spent several days of the week teaching the congregation's children. He also started a school for them and ran a weekday charity school with his own money. The Mantik tribal people opposed the school. They interfered with Carey in many ways. However, Carey persevered and built a school with 35 students. He also hired a teacher at a salary of $29. He used to help the children by bringing old clothes from his American friends.

In this case, many slaves who had just arrived from America and settled in Africa fell ill. There are no medicines or doctors there to treat them. Loth Carey saved many lives by treating them with herbs through his knowledge. He got rid of the frequent fights for space between the new arrivals and the natives and allotted them proper places. He soon became the respected governor of the colony of Liberia.

Loth Carey rescued 800 slaves from the slave market in Africa, started a school for them, and gave them a new life. Through the American Colony Society, which was started in 1817, a few friends gathered money to rescue the slaves. In 1878, Loth Carey died on board a ship in a fire that broke out while loading some goods.

It doesn't matter if I was born a slave, became independent, and improved my life. What matters is what I have done to my brothers and sisters living far away as slaves. I am not looking for a reward for my sacrifice. The purpose of my coming into this world was to work for my brothers and for Christ; these were not only the wishes of Lot Carey, but he fulfilled them. I am glad to lose all my possessions and liberty for Christ's sake—these were the last words of Loth Carey before embarking. What are we reading this to lose for Christ?

I lost everything for him. I think it's trash. Philippians 3:11


Comments

Post a Comment

Popular posts from this blog

வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)

பக்த்சிங் Bakht Singh

குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!