Bishop Polycarp, Christian bishop of Smyrna (tamil & English)
ரோம சாம்ராஜ்ஜியத்தில் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டதால் விசுவாசிகள் அதிக சித்திரவதைக்கு உள்ளானார்கள். கிறிஸ்துவை மறுதலித்து ரோம கடவுளை வணங்க கட்டளை பிறப்பித்திருந்த காலம் அது. ரோம கடவுளை வணங்காதவர்கள் சிங்கத்திற்கு இரையாக போடப்பட்டனர். கிறிஸ்துவை பின்பற்றியதால் பலவித சித்திரவதைகளுக்கும் கொடுமைகளுக்கும் உள்ளாயினர். அப்போஸ்தலனாகிய யோவானின் சீடர்களில் ஒருவராக இருந்த போலிகார்ப் மரணத்தைக் கண்டு பயம் கொள்ளாத விசுவாச வீரராக வாழ்ந்து வந்தார். கிறிஸ்துவின் நிமித்தம் துன்பப்படுவதை இன்பமாக எண்ணியவர். சிமிர்னா பேராயராக பணியாற்றி வந்த 86 வயதான போலிகார்ப்பை கொல்ல ரோம அரசாங்கம் வகை தேடிவந்தனர். அவரை கைது செய்வதற்கு மூன்று நாட்கள் முன்பதாக, அவர் தனது அறையில் ஜெபித்துக் கொண்டிருக்கும் போது தனது தலையணை, தீப்பற்றி எரிவதைப் போன்ற தரிசனத்தை கண்டார். அன்று முதல் தான் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் தான் விரைவில் உயிரோடு எரிக்கப்படப் போவதாக கூறினார். போர்வீரர்கள் போலிகார்ப்பை பிடிக்க வந்த அன்றும், கிறிஸ்துவின் சித்தம் மட்டுமே நடக்கும் என்று கூறி அவர்களிடம் தனக்கு ஒரு மணி நேரம் ஜெபிக்க அனுமதி தர கோரி...