FRANCIS ASBURY ஆஸ்பரி (Tamil & english)
ஆஸ்பரி 1770 களில் வாழ்ந்த ஒரு மெத்தடிஸ்ட் சபை பிரசங்கியார். சுற்று சவாரி பிரசங்கி ( Itinerant Preacher) என்னும் முறையை ஆத்துமாக்களை கிறிஸ்துவுக்குள்ளாக ஆதாயப்படுத்த பயன்படுத்தியவர் இவர். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10000 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்தார். இவ்வாறு 50 ஆண்டுகள் குதிரையில் சுவிசேஷ பணியை செய்து வந்தார். சரீரத்தில் சுகவீனம் இருந்தாலும் அதை ஒரு பொருட்டாக எண்ணாமல் நீண்டகாலம் கெட்டுப்போகாத ஒரு உணவினால் தன்னை பலப்படுத்திக் கொண்டு ஆத்தும ஆதாய பணியை செய்து வந்தார். அமெரிக்காவில் குடியேறிய ஆங்கிலேய குடியிருப்புகளில் இருந்தவர்களை ஆண்டவருக்குள் வழிநடத்த இந்த குதிரை சவாரி முறையை பயன்படுத்தினார். ஆங்காங்கே ஆலயங்களையும் கட்டி எழுப்பினார். 1771ம் ஆண்டு ஆஸ்பரி இந்த குடியிருப்பு பகுதிக்கு வந்த பொழுது முழு அமெரிக்காவிலும் 600 மெத்தடிஸ்ட் கிறிஸ்தவர்களே இருந்தனர். ஆனால் இவர் ஊழியம் செய்த 45 வருடங்களுக்குப் பின்னர், அந்த தொகை இரண்டு இலட்சமாக பெருகியது. அவரைப் போல 700 சுற்று சவாரி பிரசங்கிமார்களை எழுப்பினார். அவருடைய சுவிசேஷப் பணி கிட்டத்தட்ட பவுல் அப்போஸ்தலனி...