Posts

Showing posts with the label missionaries

மாம்பழச் சங்க விழா Mambala Changam (Tamil & English)

தென்னகத்தின் மீட்பிற்காக மேலை நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு மிஷனரிகளாக வந்த பல போதகர்கள்,  அறிஞர்கள் மற்றும் மருத்துவர்கள் அரும் பெரும் தொண்டாற்றினார்கள்.  அவர்களின் முயற்சிகளுக்கு பலனாகவே இன்று தென் தமிழகத்தில் பல நூறு பள்ளிக்கூடங்கள்,  ஆலயங்கள்,  சமுதாய மேம்பாட்டுப் பணிகள் போன்றவை என்றும் அழியாது உயர்ந்து நிற்கிறது. “திருநெல்வேலியின் அப்போஸ்தலன்” என்று அழைக்கப்பட்ட முன்னோடி ஊழியர் ரேனியஸ் ஐயர் அவர்கள் இத்தகைய சிறப்புமிக்க தொண்டாற்றியது மட்டுமல்லாது, மக்கள் மனதில் பதிந்திருந்த ஜாதிவெறி,  மூடநம்பிக்கைகள்,  ஏற்றத்தாழ்வுகள் போன்றவற்றிலிருந்து விடுதலை பெற அதிக முயற்சி எடுத்தார். அக்காலத்தில் புதிதாக இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட மக்களுக்கு பிற மதத்தினரால் கடும் உபத்திரவம் ஏற்பட்டது. எனவே அப்பகுதிகளில் மிஷன் சார்பில் நிலங்களை வாங்கி, அங்கு புதிய கிறிஸ்தவர்களை குடியேறும் படி செய்தார். இதனால் டோனாவூர் உட்பட சுமார் 25 கிறிஸ்தவ கிராமங்கள் ரேனியஸ் ஐயர் அவர்களால் உருவாக்கப்பட்டது. இக்கிராமங்களில் செயல்பட்டுவந்த சபைகளில் பல ஒழுங்குமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அனுதின...