கிளாரா ஸ்வைன் Dr. Clara Swain (Tamil & English)
டாக்ட ர் கிளாரா ஸ்வைன் 1834 ம் ஆண்டு ஜூலை 18 ம் நாள் நியூயார்க் தேசத்தில் பிறந்தார் . இவரது தந்தை ஜான் ஸ்வைன் , ஐரிஸ் வம்சா வழியைச் சேர்ந்தவர் . தாயார் கிளாரிசா , நியூ இங்கிலாந்து வம்சா வழியைச் சேர்ந்தவர் . கிளாரா தனது எட்டாவது வயதில் மெதடிஸ்ட் சபையில் சேர்ந்தார் . தனது மத ஆய்வுகளைத் தொடர்ந்து 21 ம் வயதில் கிளாரா , கேஸ்டிலில் தனியார் மாணவர்களுக்கு கற்பிக்கத் தொடங்கினார் . பின்னர் ஒரு பள்ளியில் முறையாக கற்பிக்க , நியூயார்க்கின் கனான்டைகுவாவிற்கு சென்றார் . அங்கு நோய்வாய்பட்ட மக்களை கவனிப்பதன் மூலம் , மருத்துவம் படிக்க அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது . கேஸ்டிலிலுள்ள சானிடோரியத்தில் தனது மருத்துவ படிப்பை தொடர்ந்து அதில் பட்டமும் பெற்றார் . 1870 ம் ஆண்டு ஆண்டவரின் அழைப்பை பெற்று இந்தியா வந்தார் . உத்திர பிரதேசத்திலுள்ள பரேலி மாவட்டத்தில் தன் மருத்துவப் பணியை ஆரம்பித்தார் . அந்நாட்களில் மருத்துவ மிஷனெரியாக கடல் கடந்து வந்த பெண்களில் இவரே முதன்மையானவர் . ஒரு பெண் ம...