Posts

Showing posts with the label AMY

AMY CARMICHAEL ஏமி கார்மைக்கேல் (Tamil & English)

Image
ஏமியும் அவள் அம்மாவும் சிற்றுண்டி சாலையில் அமர்ந்து இருந்தார்கள். வெளியே மழையோடு குளிரும்  வாட்டி கொண்டிருந்தது. வித விதமான உணவுகள் கண்ணாடி பெட்டியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. ஏமியின்   விருப்பத்திற்கு ஏற்ப அவள் தாய் அவளுக்கு கேக்குகளை வாங்கி கொடுத்தார்.  வெளியே மழை கொட்டோ கொட்டு என கொட்டி கொண்டிருந்தது.  ஏமி அவள் வயதையொத்த ஒரு சிறுமி கடைக்கு வெளியே நின்று கொண்டிருப்பதை கண்ணாடி வழியாக கவனித்தாள். கிழிந்த ஆடையோடு காலில் செருப்பில்லாமல்,  தலையில் குளிருக்கு போடும் குல்லாவும் இல்லாமல் உடல் நடுங்கி நின்று கொண்டிருந்தாள்.  பசியின் கொடுமையினால்  ஜன்னல் வழியாக பலகாரங்களை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்த அச்சிறுமியின் காட்சி ஏமியின் சிறிய உள்ளத்தை அதிகம் பாதித்தது. வீட்டிற்கு வந்து குளிர்காயும் அடுப்பின் அருகில் தன் உடைகளையும் காலணிகளையும் சூடாக்கி கொண்டிருந்த ஏமி,  திடீரென்று எழுந்து ஒரு பென்சிலை எடுத்தாள்.    நான் வளரும்போது  என் கையில் பணம் வரும்போது உன்னை போன்ற ஏழை சிறுமிகளுக்கு அழகிய பெரிய இன்பமான வீடு ஒன்றை கட்டுவேன்   ...