Posts

Showing posts with the label first protestant missionary

Bartholomaus Ziegenbalg சீகன்பால்கு ஐயர் (Tamil & English)

Image
 சீகன்பால்கு ஐயர் ஜெர்மனி தேசத்திலிருந்து தன்னுடைய 23ஆம் வயதில் தமிழ்நாட்டில் தரங்கம்பாடிக்கு வந்தார். 13 ஆண்டுகள் மாத்திரமே ஊழியம் செய்த அவர் தன்னுடைய 36வது வயதில் மரித்துப் போனார். வாலிப வயதில், வாழ வேண்டிய வயதில், திருமணமான மூன்று ஆண்டுகளில் தேவனுடைய ராஜ்யத்தில் சேர்ந்தார். ஆனால் அவர் வாழ்ந்த நாட்களில் தனக்கென வாழாமல் தேவனுக்கென வாழ்ந்த உத்தம ஊழியராக வாழ்ந்தார். கிறிஸ்துவின் நிமித்தம் பாடுகளை சந்தித்து சிறையில் அடைக்கப்பட்ட போதிலும், அவருக்காக முன்வைத்த கால்கள் ஒருபோதும் பின்னிட்டுப் பார்க்கவில்லை. தேவன் தன்னை கொண்டு நிறைவேற்ற உள்ள திட்டத்தை செயல்படுத்த சீகன்பால்க் தன் தரிசன பார்வையை கூர்மையாக்கினார். தன் எண்ணங்களை கிறிஸ்துவின் ஆளுகைக்குள் ஒப்புக்கொடுத்து பரந்த தரிசனத்தை பெற்றுக்கொண்டார். அவர் மரித்த போது அவருடைய சரீரம் தரங்கம்பாடியில் அவர் கட்டிய எருசலேம் ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவர் நினைவாக எழுப்பப்பட்டுள்ள தூணில் கீழ் கண்ட வாசகம் எழுதப்பட்டுள்ளது. பர்தலோமேயு சீகன்பால்க் • முதன்முதல் இந்தியா வந்த புராட்டஸ்டண்ட் அருள் தொண்டர் • முதன்முதல் அரசின் உரி