Henry Moorhouse, ஹென்றி மூர்ஹவுஸ் (Tamil & English)
மான்செஸ்டர் எழுப்புதல் இங்கிலாந்து ஹென்றி மூர்ஹவுஸ் 1840- ல் மான்செஸ்டரில் உள்ள ஆர்ட்விக்கில் ( Ardwick ) பிறந்தார் . அவர் தம் இளவயதிலேயே பலமுறை சிறைச்சாலைக்கு சென்றுள்ளார் . பதினாறு வயதுக்குள் அவர் சூதாட்டக்காரராகவும் , அந்த முரட்டு கும்பல் ஒன்றின் தலைவராகவும் , மேலும் கட்டுக்கடங்காதவராகவும் உருவெடுத்தார் . அதற்குப்பின் அவர் ராணுவ வீரராக பணியாற்ற விரும்பி ராணுவத்தில் சேர்த்தார் . ஆனால் , அவருடைய தகப்பனார் அதிக பணம் செலவு செய்து வெளியே கொண்டு வந்து விட்டார் . அவர் தற்கொலை எண்ணத்தால் அழுத்தப்பட்டு , தேவைப்பட்டால் தன்னைக் கொல்வதற்கென்று ஒரு துப்பாக்கியையும் தன்னோடு வைத்திருந்தார் . ஒருநாள் இவர் மான்சென்ஸ்டரில் உள்ள அல்ஹம்பரா என்னும் சர்க்கஸை கடந்து செல்லும் போது ரிச்சர்ட் வீவர் பிரசங்கித்துக் கொண்டிருந்தார் . அங்குள்ள இரைச்சலைப் பார்த்து ஏதோ கலவரம் நடக்கிறது என்று எண்ணி தன்னுடைய உடையை அணிந்து உள்ளே சென்றார் . அவர் உள்ளே சென்ற போது இயேசு என்ற ஒரு வார்த்தையினால் தொடப்பட்டார் . ரிச்சர்ட் வீவருடைய பிரசங்க