Posts

Showing posts with the label south India

ஈவ்லின் பிராண்ட், Evelyn Brand (Tamil & English)

Image
    மலைப்பிராந்தியங்கள் என்றாலே ஊட்டி , ஏற்காடு போன்ற சுற்றுலாத் தளங்கள் தான் நம் நினைவிற்கு வரும் . வசதியான இனிமையான சூழல்கள் அமைந்த அந்த இடங்களுக்கு எத்தனை முறை சென்றாலும் மனம் சலிக்காது . ஆனால் கொல்லிமலை , பச்சைமலை , கல்வராயன் மலை போன்ற இடங்களோ , படிப்பறிவில்லாத பின் தங்கிய மக்களால் சூழ்ந்த இடம் . மின்வசதி இல்லாத பல கிராமங்கள் இங்கு இன்றும் உண்டு . அப்படியானால் 130 வருடங்களுக்கு இந்த பகுதி எப்படி இருந்திருக்கும் ? சற்று யோசித்துப் பாருங்கள் . ஆனால் இந்த மலைப் பகுதி ஒரு இளம் பெண்ணுக்கு தரிசன நிலமாக இருந்திருக்கிறது .       அந்த இளம் பெண்ணின் பெயர் ஈவ்லின் பிராண்ட் .  இவர் ஒரு மிகப்பெரிய தொழிலதிபரின் ஒன்பதாவது மகள் . வசதியான குடும்பச் சூழல் நிறைவான வாழ்க்கை , எங்கு தன் மகள்கள் தன்னை பிரிந்து தூரம் சென்று விடுவார்களோ என்று எண்ணி திருமணத்தையும் தாமதப்படுத்தினார் தகப்பனார் ஹாரிஸ் . ஆனாலும் தேவனுக்கடுத்தவைகளில் ஒரு நாளும் குறைவுபட்டவர் இல்லை . குடும்பமாய் ஊழியங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார் . ஈவ்லின் சிறந்த ஓவியர் . இவரோடு தேவன் இடைபட்ட பிறகு தன் தகப்பனாரிடம் தன்னுடைய தரிசனத்தைப்