Posts

Showing posts with the label thirty-nine freezing to death.

Martyrs in Rome , ரோம் நகரில் இரத்த சாட்சிகள் (Tamil & English)

Image
40 Martyrs  ரோம சக்ரவ ர்த்தியின் போராளிகளில் 14- ஆம் பட்டாளத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு திடீரென்று ஆணை பிறப்பிக்கப்பட்டது . மன்னன் லைசீனியஸிடமிருந்து அனுப்பப்பட்ட அந்த அரச கட்டளையின்படி அவர்கள் அனைவரும் தன் குலதெய்வத்துக்கு முன்பு விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும் . அந்த போர் படையில் 40 பேர் கிறிஸ்துவை சேவிக்கும் வீரர்கள் இருந்தனர் . இயேசுவுக்கு முன்பு தெண்டனிட்டுப் பணிந்து வாழும் நாங்கள் வெறும் சிலைகளுக்கு முன்னதாக தாழ்பணிய முடியாது என்று தீர்க்கமாக மறுத்து விட்டனர் . இது நடந்தது கி . பி .320 – ஆம் ஆண்டில் . அது ஒரு பனிகாலம் , சிலைக்கு முன் சிரம் தாழ்த்த மறுத்துவிட்ட அந்த கிறிஸ்துவின் அடியவர்கள் உறைந்துபோய் நின்ற நதியொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் . அவர்களது அனைத்து வஸ்திரங்களும் உரிந்து கொள்ளப்பட்டன . ஒன்று அவர்கள் கிறிஸ்துவை மறுதலிக்க வேண்டும் அல்லது அந்த உறைபனியில் வெற்றுடம்போடு நின்று சாக வேண்டும் . இது தான் அவர்கள் முன் வைக்கப்பட்ட தெரிந்தெடுப்பு . அஞ்சாத ஆண்மையோடு அந்த நாற்பது வீர விசுவாசிகளும் பாடல்கள் பாடி அந்தக் கொல்லும் பனியிலும் தேவனை துதித்த வண்ணம் இருந்தன...