John Hyde, ஜான் ஹைடு
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், இந்தியாவில் எல்லாப் பகுதிகளிலும் சுவிசேஷம் வேகமாகப் பரவ ஆரம்பித்தது. ஆனால் கிறிஸ்தவர்கள் மத்தியிலோ, திருச்சபையிலோ எந்தவித அனலுமில்லாத நிலை இருந்தது. பஞ்சாப் மாநிலத்திலும் இதே நிலை தான் காணப்பட்டது. 1892-ம் ஆண்டு இம்மண்ணில் ஜெபவீரன் ஜான் ஹைடு கால்பதித்தார். இவரது தந்தை ஸ்மித் ஹாரிஸ் ஹைடு குருத்துவப் பணி செய்து வந்தார். இவரது மனைவி திருமதி. ஹைடு அம்மையாரும் போதகருக்கேற்ற சிறந்த துணைவியாராக இருந்தார். ஆத்தும அறுவடைக்கு பணியாளர்கள் தம் திருச்சபையிலிருந்து புறப்பட்டுச் செல்ல வேண்டும் என்று இத்தம்பதியர் தினந்தோறும் தேவனிடம் மன்றாடி வந்தனர். ஆனால் தன் மகனே இப்பணிக்குச் செல்வார் என்று சிறிதும் நினைக்கவில்லை. அழைத்தவர் தேவன் அல்லவா? ஆகவே பெற்றோர் சந்தோஷத்தோடு தங்கள் மகனை பஞ்சாப் மாநிலத்திற்கு அனுப்பி வைத்தனர். ஜான் ஹைடு சாதாரண மனிதராகவே காணப்பட்டார். அவருக்குக் கேட்கும் திறன் சிறிது குன்றியிருந்தது. இது அவர் இந்திய மொழிகளைக் கற்றுக் கொள்ள இடையூராக இருந்தது. எனினும், அதனைப் பொருட்படுத்தாது முன்னேறி சென்றார். "The Punjab Prayer Union" என்ற குழுவோடு...